அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் நேற்று திரண்டு வந்து பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து தமிழ்செல்வன் எம்.எல்.ஏ.விடம் மனு கொடுத்தனர். அதில், பாடாலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் போது சிகிச்சை அளிக்க பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு வரவேண்டியிருக்கிறது. எனவே பாடாலூரில் தாலுகா அளவிலான மருத்துவமனை அமைத்து கொடுத்தால் விபத்துக்களின் போது முதல் உதவி சிகிச்சை அளிக்க ஏதுவாக இருக்கும் என்று கூறியிருந்தனர். மனுவை பெற்று கொண்ட தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-