அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூரில் குற்ற சம்பவங்களை தடுக்க இரவு நேர ரோந்து பணி துரிதப்படுத்தப்படும் என்று திருச்சி சரக டி.ஐ.ஜி. பவானீஸ்வரி கூறினார்.
ஜூலை 22, 2017, 03:30 AMபெரம்பலூர்,

பெரம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று திருச்சி சரக டி.ஐ.ஜி. பவானீஸ்வரி திடீரென வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் இந்த ஆண்டு போடப்பட்டுள்ள வழக்குகள் குறித்த விவரங்கள், குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரின் செயல்பாடுகள், குற்ற சம்பவங்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அவர் போலீசாரிடம் கேட்டறிந்தார்.

மேலும் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை சரியாக பராமரித்து வர வேண்டும் எனவும், போலீஸ் நிலையத்தில் விசாரணை குற்றவாளிகளை அடைத்து வைக்கும் அறையை பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சீருடை பணியாளர் வாரியம் நடத்திய காவலர் எழுத்து தேர்வில் தேர்வானவர்களுக்கு திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 27–ந்தேதி உடல்தகுதி தேர்வு தொடங்கி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரகமாக நடந்து வருகின்றன. 3,589 ஆண்கள், 1,497 பெண்கள் என மொத்தம் 5,086 பேர் உடல்தகுதி தேர்வில் பங்கேற்கின்றனர்.

இதில் முறைகேடுகளை தடுக்கும் பொருட்டு உடல்தகுதி தேர்வானது வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. புதிதாக தேர்வு செய்யப்படவுள்ள போலீசார் பணியமர்த்தப்பட்டவுடன் போலீஸ் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறை நீங்கும். பெரம்பலூரில் திருட்டு, உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு இரவு நேர ரோந்து பணி துரிதப்படுத்தப்படும், என்று கூறினார். அப்போது பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜ்குமார், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன், சப்–இன்ஸ்பெக்டர் அகிலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-