அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,ஜூலை 14:
பெரம்பலூர் அருகே பிரம்மதேசம் கடை வீதியில் கேட்பாரற்றுக் கிடக்கும் சோழர் காலக் கல்வெட்டு துணி துவைக்க பயன் படுத்துவது வேதனையளிக்கிறது என்று வரலாற்று ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
சோழர் காலத்தில் பிராமணர்களுக்கு தானமாக வழங்கப் பட்ட ஊர்கள் பிரம்ம தேயம். இது நாளடைவில் பிரம்ம தேசம் என அழைக் கப் பட் டன. பெரம்பலூர் மாவட்டத்திலேயே எழுமூர், விளாமுத்தூர், கொத்த வா சல், கைகளத்தூர், சித்தளி, பெரு நிலா, கீரனூர், ஆதனூர் சாத்தனூர், பிரம்மதேசம் ஆகிய 9 கிரா மங் கள் பிரம் ம தேய கிரா மங் க ளாக சோழர் கால கல் வெட் டு க ளில் கூறப் ப டு கின் றன. இதில் பெரம் ப லூர் மாவட் டம், வேப் பந் தட்டை தாலு கா வில் வாலி கண்டபுரம் அருகே பிரம் ம தே சம் என்ற கிரா ம மும் ஒன் றா கும். இந்த பிரம் ம தே சம் கிரா மத் திற்கே முந் தைய காலங் க ளில் பல் வேறு பெயர் கள் இருந் துள் ளது என கல் வெட் டு க ளின் மூல மாக தெரிய வரு கி றது.
இதன் படி வாலி கண் ட பு ரம் வாலீஸ் வ ரர் கோயி லில் உள்ள, முத லாம் பராந் தக சோழ ரின் 3வது ஆட் சி யாண் டான கிபி 910ல் பொறிக் கப் பட்ட கல் வெட் டில் வன் னாட்டு பிரி தி சூ ர மங் க லம் என வும், அவ ரது 31வது ஆட் சி யாண் டான கிபி 938ல் பொறிக் கப் பட்ட கல் வெட் டில் வன் னாட்டு பிரம் ம தேய பிர தி சூ ர மங் க லம் என வும் குறிப் பி டப் ப டு கி றது. மேலும் இக் கோ யி லில் உள்ள 3ம் ஜடா வர் மன் சுந் த ர பாண் டி ய னின் 18வது ஆட் சி யாண் டான கிபி1296ல் பொறிக் கப் பட்ட கல் வெட் டில் பிரம் ம தே ச மான திரு வா ப ர ண மிட்ட பெரு மாள் நல் லூர் எனக் குறிப் பி டப் ப டு கி றது. இந்த பிரம் ம தே சம் கிரா மத் தின் கடை வீ தி யில் ராமன் என் ப வ ரது வீட் ட ருகே 828 ஆண் டு கள் பழ மை யான, இவ் வூரை பற் றிய சுவா ரஸ் ய மான விளக் கம் தரக் கூ டிய கல் வெட்டு கேட் பா ரற்று கிடந் தது.
இக் கல் வெட்டை அரி ய லூரை சேர்ந்த அரசு கல் லூரி முன் னாள் முதல்வ ரான வர லாற்று துறை பேரா சி ரி யர் தியா க ரா ஜன் கண் ட றிந்து வெளிப் ப டுத் தி யுள் ளார். இதனை, பெரம் ப லூர் மாவட்ட பிரம் ம தே யங் கள் என்ற தலைப் பில் ஆய்வு மேற் கொண்டு வரும் அரும் பா வூரை சேர்ந்த பண் பாட்டு ஆய் வா ளர் செல் வ பாண் டி யன் என் ப வர் நேற்று மீளாய்வு மேற் கொண் ட போது, பிரம் ம தே சம் கிரா மத் தின் பழ மையை பறை சாற் று கின்ற ஒரே ஆதா ர மாக இருப் பது இந்த கல் வெட் டு தான், அழிந்து வரும் நிலை யில். துணி துவைக்க பயன் ப டுத் தும் கல் லாக கேட் பா ரற்று கிடக் கும்,கல் வெட்டை பேணி பாது காக்க வேண் டிய அவ் வூ ரா ரின் கடை மை யென்று தெரி வித் துள் ளார். பிரம் ம தே சம் போன்று, எழு மூர், பில் லங் கு ளம், பேரளி உள் ளிட்ட கிரா மங் க ளில் கேட் பா ரற் றுக் கி டக் கும் கல் வெட் டு களை, வெறும் கல் வெட் டாக எண் ணா மல், வர லாற்று ஆவ ண மா கக் கருதி மாவட்ட நிர் வா கம் பாது காக்க விரைந்து நட வ டிக்கை எடுக்க வேண் டும் என வர லாற்று ஆர் வ லர் க ளின் வேண் டு கோள் விடுத் துள் ள னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-