அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
: ஜூலை 20
துபை அரசின் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேசன் துபை (Investment Corporation Dubai - ICD) என்ற நிறுவனத்திற்கு சொந்தமானவை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் பிளை துபை விமானங்கள். எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபை டெர்மினல் 3 ல் இருந்து செயல்படும் நிலையில் பிளை துபை டெர்மினல் 2ல் இருந்து இயக்கப்படுகிறது. இதில் பிளை துபை விமான சேவை பட்ஜெட் எனப்படும் குறைந்த கட்டண விமான சேவையாகும். இவை இரண்டும் தனித்தனி நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் 259 விமானங்களுடன் 157 பயண இலக்குகளுக்கு (Destination) பறந்து வருகிறது, இவற்றில் 16 கார்கோ மட்டும் (Cargo Only) இலக்குகளும் அடக்கம். பிளை துபை 58 நவீனரக போயிங் 737 விமானங்களுடன் 95 பயண இலக்குகளுக்கு சேவை வழங்கி வருகிறது. இந்த இரு விமான சேவைகளும் ஒருமுகப்படுத்தப்படுவதால் (Code Sharing) மொத்தம் 216 பயண இலக்குகளுக்கு இணைச்சேவை வழங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டிற்குள் இந்த 2 நிறுவனங்களும் இணைந்து சுமார் 380 விமானங்களுடன் 240 பயண இலக்குகளுக்கு சேவை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளன.இந்த புதிய இணைச்சேவை (Code Sharing, Integrated Network Collaboration, Spanning Commercial, Network Planning, Airport Operations and Customer Journey, Frequent Flyer Programmes) திட்டங்கள் இந்த வருட இறுதிக்குள் நடைமுறைக்கு வரும்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
அதிரை நியூஸ்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-