அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,ஜூலை 14:
ரஞ்சன் குடி கோட்டை சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு வரலாற்று ரீதியாக பெருமை சேர்க்கும் சுற்றுலா தலமாக இருப்பது ரஞ்சன் குடி கோட்டை. 16ம்நூற்றாண்டின் இறுதியில் இதன் கட்டுமானப் ப ணி கள் தூங்கானை மறவன் என்ற குறு நில மன் ன ரால் தொடங் கப் பட் டது. சந்தா சா ஹிப் பிரெஞ்சு கூட் டுப் ப டைக் கும், முக ம து அலி ஆங் கி லேய கூட் டுப் ப டைக் கும் இடையே 1751ம் ஆண்டு நடந்த வால் கொண் டா போர் ரஞ்சன் குடி கோட்டையைமையமாக வைத்து நடந்ததாக வரலாற்று ஆதாரங்கள் உள் ளன.
இக் கோட்டையை சுற்றி இன்றும் அகழிகள், விதான மண்டபம், பீரங்கி மேடை, கொடி மேடை, தண்டனைக் கிணறு, வெடி மருந்து கிடங்கு, புறவழி சுரங்கப் பாதை, பிற் கால பாண்டியர் காலத்தில் கட்டப் பட்ட மண்டபம், முகமதியர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட மசூதிகள், இயற்கை சீற்றங் க ளால் பாதிக் கப் படா த படி துளை கள் உள் ளன. மேலும் இடப் பட்ட சுற் றுச் சு வர், குதி ரை லா யம் மற் றும் கடல் மட் டத் தி லி ருந்து 152அடி உய ர முள்ள கோட்டை உச்சி யில் குளிப்பதற்காகவோ அல்லது மழை நீரை சேமிக்கவோ அமைக்கப் பட்ட குளம் போன் றவை அழியா மல் உள் ளன.
இந் நி லை யில், கடந்த 3 ஆண் டு க ளாக ஒன் றி ரண்டு பணி கள் கண் து டைப் புக் காக நடந்து வரு கி றது. கடந்த ஆண்டு இறு தி யில் இந் திய தொல் லி யல் துறை யின் சென்னை தலைமை கண் கா ணிப் பா ளர் ரஞ் சன் குடி கோட் டையை பார் வை யிட்டு உத் த ர விட்ட பிறகே, சிறப் புக் கு ழு வி னர் கோட் டை யில் புண ர மைப் புப் பணி கள் மேற் கொள்ள தேவை யான திட் ட வ ரை வு க ளைத் தயா ரித்து அனுப் பி னர். அதன் படி இரும்பு சுற் றுச் சு வர் அமைக் கும் பணி கள் தான் தற் போது தொடங் கி யுள் ளது.
ஏற் கனவே கோட்டையின் மேல் தளத்திலுள்ள கிழக்கு சுவர்களே சீரமைக்கப்பட்டுள்ளன. கோட்டையின் பின் புறம் ஏனோ அரை நூற்றாண்டுகளாக அப்படியே விடப் பட்டுள்ளது.
இத னால் பீரங்கி குண்டுகளால் கூட துளைக்க முடி யா மல் கட் டப் பட்ட ரஞ் சன் குடி கோட் டை யின் பின் புற சுவர் மு ழு வ தும் புளிய மரங்களின் வேர்கள் துளைத் தெ டுத்து வரு கி றது. குறிப் பாக கோட்டை மீதே ஐந்தாறு புளிய ம ரங்கள் அரை நூற்றாண்டுகளாக வளர்ந்திருப்பதை எந்த தொல்லியல் துறை அதிகாரியும் இன்று வரை கண்டு கொள்ளவே இல்லை. கோட்டை சுவர்களில் புளிய மரவேர்கள் துளைத் தெ டுத்து மதில் சு வர் களே அந் த ரத் தில் தொங் கும் நிலை யில் அதனை சரி செய் யா மல் அப் ப டியே விட் டு விட்டு கோட் டையை சுற்றி இரும்பு வேலி அமைப் பது எதற் காக என் பது கேள் விக் கு றியை ஏற் ப டுத் தியுள் ளது. வேற்று நாட் ட வரே புக மு டி யாத கோட் டை யில் வேர் கள் பு குந்து நாசம் செய் வதை துறை சார்ந் தோர் அறிந் தா வது கோட் டையை காப் பாற்ற முன் வர வேண் டும் என்ற வேண்டு கோள் வரலாற்று ஆர்வலர் கள் மத்தியில் எழுந்துள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-