அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர், ஜூலை 2:
பெரம்பலூர் மாவட்ட வழங்கல் அலுவலரின் யூசர் நேம், பாஸ் வேர்டு பயன் படுத்தி போலி ரேஷன் கார்டுகள்  கொடுக்க பயன் படுத்திய தனியார் பொது சேவை மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது. சைபர் கிரைம் போலீசார் இன்று விசாரணை நடத்துகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்தவர் ராஜா (32). எம்சிஏ பட்டதாரி. இவரது மனைவி பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறையை சேர்ந்தவர். பெரம்பலூர் சங்குப் பேட்டை அருகே டிஜிட்டல் இண்டியா பொது சேவை மையத்தை ராஜா நடத்தி வந்தார். இதன் மூலம் ஆதார் அட்டை திருத்தம் செய்தல், பான் கார்டு பெற்று தரும் பணிகளை செய்து வருகிறார்.
இந் நிலையில் வட்ட வழங்கல் அலுவலகங்களில் புதிய ரேஷன் கார்டு, திருத்தம் கோரி விண்ணப்பித்தவர்களின் பட்டியல் காத்திருப்பில் உள்ளது. இந்நிலையில் ராஜா நடத்தி வந்த டிஜிட்டல் இந்தியா பொது சேவை மையத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு உடனுக்குடன் புது ரேஷன் கார்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டும், திருத்த பணிகள் மேற் கொள் ளப் பட் டும் வந்துள்ளன. இதனால் ராஜா நடத்தி வரும் மையத்தில் வட்ட வழங்கல் அலுவலகத்தில் காத்திருக்கும் கூட்டத்தை விட அதிகப் படியான கூட்டம் தினம் தோறும் குவிய துவங்கியது.
இந் நிலையில் பெரம்பலூர் மாவட்ட அளவில் வழங்கல் துறையில் ஒரு நாளில் புது ரேஷன் கார்டுகள் வழங்க மாவட்ட வழங்கல் அலுவலர் மூலம் குறிப்பிட்ட நபர்களுக்கு அனுமதி அளித்திருந்தால், அடுத்த நாள் அலுவலக கணக்கில் அதை விட கூடுதலான நபர்களுக்கு புது ரேஷன் கார்டு வழங்கப் பட்டதாக பட்டியலில் இருக்கும்.இதனால் சந்தேகமடைந்த தாசில்தார் பால கிருஷ்ணன் மற்றும் வழங்கல் துறையினர் நேற்று முன் தினம் டிஜிட்டல் இந்தியா பொது சேவை மையத்தை சோதனையிட்டனர். அப்போது பெரம்பலூர் மாவட்ட வழங்கல் அலுவலரின் அரசாங்க யூசர் நேம், பாஸ்வேர்டு பயன் படுத்தி பணத்துக்காக பலருக்கும் மாவட்ட வழங்கல் அலுவலர் அனுமதி அளித் த து போல் புதிய ரேஷன் கார்டுகளுக்கு அனுமதி வழங்கி வருவதும், ரேஷன் கார்டுகளில் சம்பந்தமில்லாதவரின் பெயரை சட்ட விரோதமாக பயன் படுத்த பெயர்களை சேர்க் கும் பணிகளில் ஈடு பட்டு வந்ததும் கண்டறியப் பட்டது. இதையடுத்து பெரம்பலூர் போலீசில் உணவுப் பொருள் வழங்கல் துறை சிறப்பு வருவாய் ஆய்வாளர் கபிலன் புகார் செய்தார். அதன் பேரில் ராஜா கைது செய்யப் பட்டார்.
இத னை ய டுத்து நேற்று ராஜா நடத்தி வந்த டிஜிட்டல் இந்தியா பொது சேவை மையத்தை பூட்டி பெரம்பலூர் தாசில்தார் பால கிருஷ்ணன் சீல் வைத்தார். இந்நிலையில் கணினியை பயன்படுத்தி முறை கேடு நடந்துள்ளதால் திருச்சியிலிருந்து சைபர் கிரைம் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்த எஸ்பி திஷா மித்தல் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் பெரம்பலூர் வந்து இன்று விசாரணை நடத்தவுள்ளனர். அப்போது ராஜாவின் தில்லு முல்லுவால் மாவட்டத்தில் எவ்வளவு போலி ரேஷன் கார்டுகளுக்கு சட்ட விரோதமாக அனுமதி வழங்கப் பட்டுள்ளன என்பது தெரிய வரும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-