அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ஜூலை 21, 2017, 03:45 AM

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பாதுகாப்பு சட்டப்படி உணவு வியாபாரிகளுக்கு 5.8.2011 முதல் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்காக போதிய கால அவகாசம் வழங் கப்பட்டு விட்டது. எனவே தற் சமயம் உணவு வியாபாரிகள் அவர்களது விற்பனை கொள்முதல் தொகைக்கேற்ப உரிமம் அல்லது பதிவு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உணவு வியாபாரிகள் தங்களது விற்பனை கொள்முதல் தொகைக்கேற்ப ரூ.100 அல்லது ரூ.2,000 செலுத்து சீட்டு (சலான்) மூலம் கருவூலம் தொடர்புடைய வங்கியில் செலுத்தி, www.fo-o-d-l-i-ce nis-i-ng.fssai.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் பதிவேற்றம் செய்த ஆவணங்கள் மற்றும் விண்ணப்பம் அசல் மற்றும் நகலுடன் இணைத்து மாவட்ட நியமன அலுவலரிடம் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே பதிவு மற்றும் உரிமம் உள்ளவர்கள் தங்களது பதிவு மற்றும் உரிமத்தினை காலாவதியாவதற்கு முன்பே புதுப்பித்து கொள்ள வேண்டும். அவ்வாறு புதுப்பித்து கொள்ளும் பட்சத்தில் அவர்கள் தங்கள் உணவுப்பொருளின் பொட்டலத்தில் அச்சிட்டுள்ள அதே பதிவு மற்றும் உரிம எண் பெறுவதோடு அபராத தொகையினையும் தவிர்க்கலாம்.

மேலும் வணிகர்கள் தங்கள் வணிக கடைகளுக்கு உரிமம் பெறுவதற்கான சிரமங்களை குறைக்கும் வகையில் அந்தந்த வட்டங்களில் இ - சேவை மையங்கள் மூலமாக பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களும், நுகர்வோர்களும், உணவு விற்பனையாளர் களும், மாணவ மாணவிகளும் தங்களது உணவுப்பொருட் களின் தரம் குறித்து புகார் செய்வதற்கு உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் அவர் களுக்கு 9444042322 என்ற செல்போன் எண்ணிற்கு கட்செவி (வாட்ஸ்-அப்) மூலமாக புகார் தெரிவிக்கலாம்.

அவ்வாறு தெரிவிக்கப் படும் புகார்களுக்கு 24 மணி நேரத்தில் உணவுப்பாதுகாப்பு துறையின் மூலமாக நட வடிக்கை எடுக்கப்பட்டு குறைகள் சரி செய்யப்படுகின்றது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-