அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் அறிவிக்கப்பட்ட திட்டம் வி.களத்தூர் கல்லாறு குருக்கே 8 கோடி செலவில் தடுப்பனை அமைக்கும் திட்டம் ஆகும். ஆனால் இத்திட்டம் தற்போது கைவிடப்பட்டு மரமனத்தம் கிராமத்தில் செயல் படுத்த நேற்று பூமி பூஜை நடைப்பெற்றது. இதனால் வி.களத்தூர் மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனார். 
இனி வரும் தேர்தலில் அதிமுக கட்சி ஊருக்கு ஓட்டு கேட்க வந்தால் அவர்களை புறக்கனிக்க வேண்டும்.  பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மரவநத்தம் கிராமத்தில், கல்லாற்றின் குறுக்கே ரூ. 8 கோடியில் தடுப்பணை கட்டுவதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி. ராமச்சந்திரன் முன்னிலையில், பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் பூமிபூஜையை தொடக்கிவைத்து கூறியது:
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி, பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, சின்னமுட்லு அணைக்கட்டு அமைப்பதற்கு முதல்கட்டமாக ஆய்வு செய்ய ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளார். இதன்மூலம், பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற உள்ளது. மேலும், பொதுப்பணித் துறை சார்பில் வேப்பந்தட்டை வட்டம், மரவநத்தம் கிராமத்தில் கல்லாற்றின் குறுக்கே ரூ. 8 கோடியில் 125 மீட்டர் நீளம், 1.16 மீட்டர் உயரத்தில் தடுப்பணை கட்டப்பட உள்ளது. இதன்மூலம், அயன் பேரையூர் ஏரி பாசனப் பரப்பில் 93 ஏக்கரும், இதுவரை பாசன வசதி பெறாத 98 ஏக்கரும், பாசன வசதி பெறும். மேலும், இத்திட்டத்தின் மூலம் அயன்பேரையூர் கண்மாயின் கீழ், 176 ஏக்கருக்கு கூடுதல் பாசன பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், பதிவு செய்யப்பட்ட பாசன பரப்பான 105 ஏக்கர் இத்திட்டத்தின் மூலம் பாசன வசதி பெறும். இத்திட்டத்தின்படி புதிய அணைக்கட்டிலிலிருந்து 900 மீட்டர் புதியதாக வாய்க்கால் அமைத்து, ஏற்கெனவே உள்ள பழைய வாய்க்காலுடன் இணைக்கப்படுகிறது. இந்த அணைக்கட்டு கட்டப்படுவதன் மூலம் சுமார் 100 கிணறுகள், 280 அழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் உயரும். இத்திட்டத்தின் மூலமாக மொத்தம் 472.8 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், உதவிச் செயற்பொறியாளர் பிரபாகரன், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-