அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 ஜூலை 18
சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேற கடந்த மார்ச் 29 ஆம் தேதி முதல் 90 நாட்கள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இந்த பொது மன்னிப்பு காலம் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் தேதி நிறைவுற்ற நிலையில் மேலும் 1 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டதும் அடுத்த வாரத்துடன் நிறைவடையவுள்ளது.

இந்த பொது மன்னிப்பை பயன்படுத்தி இதுவரை சுமார் 572,488 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், எஞ்சியவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வெளியேறாவிட்டால் அவர்கள் மீது அபராதங்கள், சிறை தண்டனை, நாடு கடத்தல் மற்றும் சவுதிக்குள் நுழைவதற்கான நிரந்தர தடை ஆகியவை பிறப்பிக்கப்படும் என சவுதி ஜவாஜத் எனப்படும் இமிக்கிரேசன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எத்தகைய குற்றப் பின்னனியும் இல்லாத நிலையில் நாட்டை விட்டு வெளியேறிய சுமார் 12,000 பேர் மீண்டும் முறையான அனுமதிகளுடன் சவுதி திரும்பியுள்ளனர் என்றும் சவுதி ஜவாஜத் தெரிவித்துள்ளது.

Source: Saudi Gazette
அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-