அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
 ஜூலை 17
1975 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ் நாட்டை தலைமையகமாக கொண்டும் 88 நாடுகளில் கிளை பரப்பியும் செயல்படும் சர்வதேச ஆய்வு நிறுவனம் ஒன்றின் மூலம் நடைபெற்ற கருத்துக் கணிப்பில் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு அடுத்து 2 வது சிறந்த நகராக அபுதாபி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் 2 மற்றும் 3 ஆம் இடங்களை வகித்த லண்டன் மற்றும் பாரீஸ் நகரங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

The Ipsos City Index எனும் சர்வதேச நிறுவனம் சுமார் 26 நாடுகளில் 16 வயது முதல் 64 வயதுடைய சுமார் 18,000 பேரிடம் நடத்திய கருத்துக் கணிப்பின் மூலம் இவ்விபரங்கள் தெரிய வந்துள்ளன. அபுதாபியுடன் சிட்னி, ஹாங்காங், கேப் டவுன், மாஸ்கோ, டோரன்டோ உட்பட 60 நகரங்கள் பட்டியலிடப்பட்டிருந்தன.

அபுதாபி நகரம் வாழ, வேலைபார்க்க, சுற்றுலா வர, வியாபாரம் செய்ய என பல்வேறு சாதகமான அம்சங்களை தன்னுள்ளே கொண்டுள்ளதாகவும் ஆய்வில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே அபுதாபியின் ஷேக் ஜாயித் பள்ளி மக்களை அதிகம் ஈர்க்கும் உலகின் 2 வது சுற்றுலாத்தலமாக டிரிப் அட்வைஸர் எனும் இணையதளம் தேர்வு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் அபுதாபி எமிரேட்டுக்கு உட்பட்ட அல் அய்ன் நகரம் யுனெஸ்கோ நிறுவனத்தால் புரதான சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-