அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பாடாலூர், ஜூலை. 7:
பாடாலூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவ, மாணவியர்களை சரமாரியாக தாக்கிய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பள்ளியில் பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் 432 மாணவர்களும், 476 மாணவியர்களும் படிக்கின்றனர். பள் ளி யின் தலைமையாசிரியர் அம்பிகாபதி. இந்த பள்ளியின் கணினி பயிற்றுனராக மணி சேகரன் (45) பணியாற்றி வருகிறார். இவர் திருச்சி மாவட் டம் லால்குடி தாலுகா தாளக்குடி கிராமத்தைச் சேர்ந் த வர்.
நேற்று பிளஸ் 2 மாண வர் க ளுக்கு ஆசிரியர் மணி சேகரன் கணினி வகுப்பு பாடம் எடுக் கச் சென் றார். வகுப் ப றைக்கு சென்ற ஆசி ரி யர் மாண வர் களை பார்த்து தேர்வு எழு து மாறு கூறி யுள் ளார். அப் போது மாண வர் கள் பேசிக் கொண் டி ருந் த தாக கூறி மாணவ, மாண வி யரை மூங் கிக் குச் சி யால் சரா ம ரி யாக தாக் கி யுள் ள னர்.
புது விராலிப்பட்டி மாணவி கிருஷ்ண வேணி, ஆலத்தூர் கேட் ஜெனீரோஸ், பாடாலூர் மாணவிகள் மகா லட்சுமி, பல்கீஸ்  பாணு, மாணவர்கள் கிஷோர், வெங் க டேஷ் உள் ளிட்ட 40 க்கும் மேற் பட்ட மாணவ,மாண வி களை ஆசி ரி யர் மணி சே க ரன் சரா ம ரி யாக தாக் கி யுள் ளார். இத னால் வலி தாங்க முடி யா மல் கத றி னர். இவர் க ளில் கிருஷ் ண வேணி என்ற மாண வி யின் கை எலும்பு முறிவு ஏற் பட் டது. அத னை ய டுத்து இந்த மாணவி பெரம் ப லூர் மாவட்ட தலைமை அரசு மருத் து வ ம னைக்கு சென்று கட் டுப் போட்டு வந் தார். மற்ற மாணவ, மாண வி க ளுக்கு கை மற் றும் வயிறு, நெஞ்சு ஆகி யப் பகு தி க ளில் வீக் கம் ஏற் பட் டுள் ளது.
இது குறித்து மதி யம் உணவு நேரத் தில் மாண வர் கள் தங் க ளின் வீட் டிற் குச் சென்று பெற் றோர் க ளி டம் தெரி வித் த னர். அத னை ய டுத்து பெற் றோர் கள் பள் ளி யைச் முற் று கை யிட்டு ஆசி ரி யர் க ளி டம் வாக் கு வா தத் தில் ஈடு பட் ட னர். தக வ ல றிந்த பெரம்பலூர் டி.எஸ்.பி (பொறுப்பு) மோகன் தம்பி ராஜன், பாடாலூர் இன்ஸ் பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடமும், ஆசிரியர்களி ட மும் சம் ப வம் குறித்து கேட் ட றிந் த னர்.
அப் போது ஆசிரியர் மணி சேகரன் கூறும் போது, மாண வர் களை தேர்வு எழு து மாறு கூறி ய தா க வும், அவர் கள் பேசிக் கொண் டி ருந் த தால் அடித் த தா க வும் கூறி னார். அத னை ய டுத்து பள் ளிக்கு வந்த மாவட்ட மாவட்ட கல்வி அலுவலர் அருள் மொழிதேவி சம் ப வம் குறித்து விசா ரணை நடத்தி உட ன டி யாக ஆசி ரி யர் மணி சே க ரனை சஸ் பெண்ட் செய்து உத் த ர விட் டார். அத னை ய டுத்து பெற் றோர் கள் அனை வ ரும் கலைந் துச் சென் ற னர். இந்த சம் பவத் தால் பாடாலூர் அரசு மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று பெரும் பர ப ரப்பு ஏற் பட் டது.


பெரம் ப லூர் மாவட்டம் பாடாலூர் அரசு மேல் நிலைப் பள் ளி யில் தலைமை ஆசி ரி யர் தாக் கி ய தில் காய ம டைந்த மாணவி கையில் கட் டு டன் வரு கி றார். அடுத்தபடம்: தலைமை ஆசி ரி யர் தாக் கி ய தில் காய ம டைந்த மாண வர் கள்.
மணி சே க ரன்0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-