அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஜூலை 17
துபையில் நோல் கார்டுகள் என அழைக்கப்படும் பொது போக்குவரத்து வாகனங்களுக்கான மின்னனு டிக்கெட்டின் சேவைகள் தற்போது போக்குவரத்திற்கு வெளியிலும் விரிவுபடுத்தப்பட்டு வருவது அறிந்ததே.

இந்த நோல் கார்டுகளை பயன்படுத்தி ஏற்கனவே துபை மெட்ரோ நிலையங்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்களிலுள்ள ஜூம் (ZOOM STORES) எனும் சில்லறை கடைகளில் பொருட்களை வாங்க வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வசதி துபை மாநகரில் பல்வேறு பெயர்களில் இயங்கும் 1000 சில்லறை வர்த்தக கடைகளிலும் பொருட்களை வாங்க விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த வருட இறுதிக்குள் இந்த வசதியை மேலும் சுமார் 5000 சில்லறை வர்த்தக கடைகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது நீல நிற நோல் கார்டுகளில் 5000 திர்ஹமும், சில்வர் நிற கார்டுகளில் 1000 திர்ஹமும் முன்பணமாக ஏற்றி வைத்துக் கொள்ளவும், அதே அளவிற்கு நோல் கார்டுகள் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ள சில்லறை கடைகளில் பொருட்களை வாங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

நோல் கார்டுகளை பயன்படுத்தி இதுவரை பஸ், மெட்ரோ ரயில், டிராம் பயணங்களுக்கும் அனுமதிக்கபட்டதுடன் மேலதிகமாக டேக்ஸி கட்டணம், பொது பூங்காக்கள், வாகன நிறுத்த கட்டணங்கள் செலுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 
அதிரை நியூஸ்: 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-