அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...: ஜூன் 07
கத்தார் நாட்டுடனான ராஜிய உறவுகளை சவுதி, அமீரகம், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் தீவிரவாத குற்றச்சாட்டின் பேரில் துண்டித்துக் கொண்டது அறிந்ததே. இந்நடவடிக்கைக்கு ஆதரவை சில நாடுகள் தெரிவித்துள்ள நிலையில் சமூக ஊடகங்களில் எதிர்ப்பும் ஆதரவும் கலந்த பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கத்தாருக்கு ஆதரவாகவும், அனுதாபத்துடனும் பகிரப்படும் பதிவுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமீரகம் எச்சரித்துள்ளது. கத்தார் மீதான அனுதாபப் பதிவுகள் அமீரகத்தின் இறையாண்மைக்கு எதிராகவும், உள்நாட்டு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் விளங்குவதாகவும் அமீரகம் கருதுகிறது.

அமீரகத்தின் நிலையை எதிர்த்து சமூக ஊடகங்கள் வாயிலாக அல்லது எழுத்து மூலமாக அல்லது கணொளி காட்சியாக அல்லது குரல் பதிவுகள் வழியாக கருத்துக்களை பரப்பினால் அவர்கள் மீது சுமார் 3 முதல் 15 ஆண்டுகால சிறை தண்டனையும், சுமார் 5 லட்சம் திர்ஹம் அபராதமும் விதிக்கப்படும் என அமீரக அட்டார்னி ஜெனரல் கவுன்சலர் டாக்டர் ஹமாத் ஸைஃப் அல் ஸாம்ஸி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Source: 
அதிரை நியூஸ் Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-