அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஜூன் 02
புனிதமிகு மதினா நகரில் அமைந்துள்ள 'மஸ்ஜிதுன் நபவி' பள்ளிவாசலுக்கு யாத்ரீகர்கள் சிரமமின்றி வந்து செல்ல மதினா விமான நிலையத்தில் 8வது பேருந்து நிலையம் துவங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மதினாவை சுற்றி 7 நிலையங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது 80 ஷட்டில் பேருந்துகளுடன் இயங்கும் இந்த சேவை 2012 ஆம் ஆண்டு ஆரம்பமாக 4 பஸ் நிலையங்களுடன் ஒரு சில பேருந்துகளுடன் புனிதமிகு ரமலான் மாதத்தில் மட்டும் இயங்கும் வகையில் துவக்கப்பட்டு தற்போது ஆண்டு முழுவதும் இயங்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

புனிதமிகு ரமலான் மாதத்தின் முதல் 19 நாட்களும் மாலை 3 மணிக்கு துவங்கும் சேவை மஸ்ஜிதுன் நபவியில் இரவுத் தொழுகை (தராவிஹ்) நிறைவுறும் வரை இயங்கும். ரமலானின் கடைசி 10 தினங்களில் கியாமுல் லைல் எனப்படும் நள்ளிரவுத் தொழுகைகள் (தராவிஹ்) நிறைவுறும் வரை இயங்கப்படும்.

மதினா நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல 2 ரியால் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் மதினா விமான நிலைய சேவைக்கு மட்டும் 10 ரியால் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, 15 நிமிடத்தில் விமான நிலையத்திலிருந்து மஸ்ஜிதுன் நபவியை அடைய முடியும். மேலும், இந்த பேருந்துகளின் வருகை, புறப்பாடுகள் போன்ற நடமாட்டத்தை அறிந்து கொள்ள சிறப்பு செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 
அதிரை நியூஸ்: 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-