அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
: ஜூன் 20
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை தேவையில்லை என கடந்த மாதங்களில் அறிவித்ததை தொடர்ந்து வெளிநாடுவாழ் இந்தியர்கள் மத்தியில் பணப் பரிமாற்றம் மற்றும் வருமான வரி செலுத்துதல் தொடர்பாக பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்குமோ என்ற அச்சம் எழுந்தது.

எதிர்வரும் 2017 ஜூன் 30 ஆம் தேதிக்குள் பான் கார்டு வைத்திருப்பவர்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்றும், பான் கார்டில் தங்களுடைய ஆதார் அட்டை விபரங்களை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்ததால் தவறுபவர்களின் வங்கிப் பண பரிமாற்றங்களில் பிரச்சனைகள் எழலாம் என்ற அச்சமும் எழுந்தது. ஏற்கனவே வங்கிகளில் 50,000 ரூபாய் ரொக்கமாக செலுத்துபவர்கள் பான் அட்டை விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்ற கட்டாய சட்டமுள்ளது.

12 மாதங்களில் சுமார் 182 நாட்கள் தொடர்ந்து வெளிநாட்டில் வாழ்பவர்கள் வெளிநாடுவாழ் இந்தியர்கள் எனக் கருதப்படுவர். இவர்கள் இந்தியாவில் இந்திய டிரைவிங் லைசென்ஸ், சிம் கார்டு போன்றவற்றை பெறுவதற்கு ஆதார் கார்டுகள் கொடுக்க வேண்டிய அவசியமில்லை மாறாக அங்கீகரிக்கப்பட்ட பிற முகவரி அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.

என்ன ஒன்னு, தூங்கி எழுந்த புதுசா ஒரு வெளக்கமோ, சட்டமோ போடுற நாடா இருக்கிறதாலே எத நம்பியும் எதையும் செய்ய முடியாது. அரசாங்க ஊழியர்கள் என்ற பணப்பேய்ங்க இதையே மாத்தி மாத்தி பேசி கொளப்பி இருக்கிறத கறக்கப் பார்ப்பார்கள் ஜாக்கிரதை.

Source: Gulf News
அதிரை நியூஸ்
தமிழில்: நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-