அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஜூன் 02
புனிதமிகு மக்கா நகரில் மொத்தம் 30 கி.மீ.தூரத்திற்கான 58 சுரங்க வழிப்பாதைகள் உள்ளன. புனிதமிகு ரமலானில் ஏற்படும் ஜனம் மற்றும் வாகன நெருக்கடிகளை குறைக்கும் நோக்குடன் இவைகளில் தேவையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உம்ரா மற்றும் ஹஜ் யாத்ரீகர்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளன.

இந்த சுரங்க வழிப்பாதைகளில் மொத்தம் 66,935 சோடியம் மற்றும் ஒளிரும் விளக்குகள் (Fluorescent Lights) பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன், 599 மின்விசிறிகள், 42 மாற்று ஜெனரேட்டர்கள், 39 டனல் இயக்குதல் மற்றும் கட்டுப்பாட்டு அறைகள், 77 மோட்டார்களுடன் கூடிய தீயணைப்பு கருவிகள், 12 நவீன தகவல் தொழிற்நுட்ப கருவிகள், 41 கேஸ் சென்சார் சாதனங்கள், 88 தட்பவெப்ப அளவீடு கருவிகள், 12 பார்வை சாதனங்கள், 362 காற்று வேகத்தை அளவிடும் கருவிகள், 229 சைன்போர்டு பலகைகள் மற்றும் 90 குளிரூட்டும் சாதனங்களும், கண்காணிப்பு கேமிராக்களும், பல நகரும் படிக்கட்டுகளும் பொருத்தப்பட்டுள்ளன.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
அதிரை நியூஸ்: 0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-