அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஜூன் 27
அமீரகத்தில் எதிர்வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய டிரைவிங் லைசென்ஸ் மற்றும் புதுப்பிக்கப்படும் பழைய டிரைவிங் லைசென்ஸ்களின் அனுமதி கால அளவில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆரம்பமாக, 21 வயதிற்கு மேற்பட்ட அமீரக குடிமகன்கள், வளைகுடா நாடுகளை சேர்ந்தவர்கள் மற்றும் பிற வெளிநாட்டு ஓட்டுனர்களுக்கு 2 வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் டிரைவிங் லைசென்ஸ்கள் மட்டுமே வழங்கப்படும்.

பின்பு அந்த லைசென்ஸ்கள் 2 வருடங்கள் கழித்து புதுப்பிக்கப்படும் போது அமீரக குடிமகன்கள் மற்றும் வளைகுடா நாடுகளை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 10 வருடங்களுக்கும், பிற வெளிநாட்டினருக்கு 5 வருடங்களுக்கும் புதுப்பிக்கப்படும்.

தற்போது நடைமுறையிலுள்ள டிரைவிங் லைசென்ஸ்களின் கால அளவின் மீது எத்தகைய மாற்றங்கள் இல்லை என்றாலும் அவை புதுப்பிக்கப்படும் போது மட்டும் மேற்கண்ட புதிய மாற்றங்களின்படியே புதுப்பிக்கப்படும்.

அதேபோல் வெளிநாட்டினர் தங்களுடைய டிரைவிங் லைசென்ஸை புதுப்பிக்கும் போது செல்லத்தக்க அமீரக ரெஸிடென்ஸ் விசாவை (Valid Residence Permit) வைத்திருக்க வேண்டும்.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 
அதிரை நியூஸ்: 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-