மில்லத் நகரிலும் இன்று காலை முதல் நமது ஊர் மக்கள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடன் புத்தாடை அணிந்து பெருநாளை கொண்டாடி வருவதை காணமுடிந்தது.
மில்லத்நகர் பள்ளிவாசல் மைதானத்தில் காலை 7:30 மணிக்கு பெருநாள் சிறப்பு தொழுகையும் நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகைக்கு மௌலவி அஸ்ரப் அலி ஹஜ்ரத் அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்த சிறப்பு தொழுகைக்கு சிறியவர் முதல் பெரியர்கள் அனைவரும் வந்திருந்து தங்களது தொழுகையை நிறைவேற்றினார்கள்.
சுமார் ஆயிரம் பேர் இந்த தொழுகையில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தொழுகைக்கு பிறகு ஒருவருக்கொருவர் தங்களை கட்டித்தழுவியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.
மைதானம் முழுவதும் நிறைந்துவிட்டதால் அருகிலுள்ள தெருக்களிலும் தொழுகை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பின் அனைவரும் கபஸ்தான் சென்று கபர் ஜியாரத் செய்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதன் புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு....
செய்தி மற்றும் புகைப்படங்கள் : ஆலி U.முஹம்மது இக்பால்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.