அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஜூன் 17
அமீரகம், ஓமனில் நடைமுறைப்படுத்தப்படுவது போலவே சவுதியிலும் 3 மாதங்களுக்கான தினமும் 3 மணிநேர கட்டாய ஓய்வு நேரம் 15.06.2017 முதல் அமுலுக்கு வந்தது. இதன்படி தினமும் பகல் 12 முதல் மாலை 3 மணிவரை சூரியன் சுட்டெரிக்கும் திறந்த வெளிப்பகுதியில் வேலை செய்வதும், வேலை வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது. மீறுவோர் கடும் அபராதங்களை செலுத்த நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அவசரகால பணிகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது எனவும், இந்த சட்டம் ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை அமலில் இருக்கும் எனவும் சவுதியின் தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-