அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரும்பாலும் உங்களை அழைக்க விமான நிலையத்திற்கு ஊரிலிருந்து உறவினர்கள்,நண்பர்கள் வருவார்கள்
அப்படி கார்,வேன்,போன்ற வாகனங்களில் வரும்போது முடிந்தளவுக்கு இரவுப்பயணத்தைத் தவிர்த்துக்கொள்ளுங்கள் .
கார்,வேன் போன்ற வாகனங்களில் வரும்போது முதலில் நல்ல டிரைவராக தேர்வு செய்யுங்கள் குறிப்பாக குடிப்பழக்கம் இல்லாதவராக இருந்தால் இன்னும்நல்லது.
சென்னையில் இருந்து ஊர் வருவதாக இருந்தால் இரவில் மட்டும் கிழக்கு கடற்கரைச்(ECR,ROAD)சாலையை தவிர்த்துக்கொண்டு தாம்பரம்,திண்டிவனம்,பாண்டி,கடலூர்,அல்லது தாம்பரம் ,திண்டிவனம்.பண்ருட்டி,சேத்தியாத்தோப்பு,சிதம்பரம் வழியாகவும் வரலாம்;
திருச்சி விமான நிலையத்திலிருந்து இரவுப்பயணத்தின்போது பைபாஸ் சாலையை பயன்படுத்தவேண்டாம் ,மெயின் ரோட்டைப் பயன்படுத்துங்கள் .திருச்சி,திருவெறும்பூர்,வல்லம்,தஞ்சை,கும்பகோணம் வழியாகவும் வரலாம் .

வாகனம் ஓட்டும்போது நள்ளிரவு ஒருமணிக்கு மேல்தான் ஓட்டுனருக்கு அப்படிஒரு அசதிவரும் அவரும் மனிதர்கள்தான் முடிந்தவரை அவரிடம்பேச்சுக்கொடுத்துக்கொண்டே இருங்கள்.

வண்டி ஓட்டும்போது டிரைவர்செல்போன் பேச அனுமதிக்க வேண்டாம் .
வழியில் டிரைவர் நிறுத்துவதாக இருந்தால் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில நிறுத்த வேண்டாம் கடை அருகில் அல்லது பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி கொள்ளுங்கள்
உங்கள் இன்பப்பயணம் இனிமையாக அமைந்து உங்கள்குடும்பத்தோடு புனிதமான நோன்புப்பெருநாளை சிறப்போடு கொண்டாட உங்களோடு நானும் அல்லாஹ்விடம்

துஆ செய்கிறேன் .வாகனத்தில் ஏறும்போது பயண துஆ வை மறக்காதிர்கள் .

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-