அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஜூன் 18
அமீரகத்தின் தனியார் துறை நிறுவனங்களுக்கு ஈத் அல் பித்ர் எனும் நோன்பு பெருநாள் விடுமுறையை அறிவித்துள்ளது அமீரக மனிதவளத்துறை அமைச்சகம். அதன்படி,

புனிதமிகு ரமலான் நோன்பு பிறை 29 (ஜூன் 24 – சனிக்கிழமை) உடன் நிறைவுற்றால் ஷஃபான் பிறை 1 (ஜூன் 25 – ஞாயிறுக்கிழமை) பெருநாள் தினம் அனுசரிக்கப்படும். தொடர்ந்து 2 நாட்கள் (திங்கள் மற்றும் செவ்வாய்) விடுமுறை தினங்களாகும்.

மீண்டும் பணி ஜூன் 28 புதன்கிழமை முதல் துவங்கும். வெள்ளி, சனி வாராந்திர விடுமுறையுள்ளவர்களுக்கு மட்டும் 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும், மற்றவர்களுக்கு 3 நாட்கள் மட்டுமே விடுமுறையாக அமையும்.

புனிதமிகு ரமலான் நோன்பு பிறை 30 (ஜூன் 25 – ஞாயிற்றுக்கிழமை) உடன் நிறைவுற்றால் ஒருநாள் முன்பாக ஜூன் 24 – சனிக்கிழமை முதல் விடுமுறை துவங்கும். (ஜூன் 26 - திங்கட்கிழமை அன்று பெருநாள் அனுசரிக்கப்படும்).

மீண்டும் பணி ஜூலை 2 – ஞாயிற்றுக்கிழமை அன்று துவங்கும். அதாவது முன், பின் வெள்ளி சனி விடுமுறைகளையும் சேர்த்து மொத்தம் 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

Source: Gulf News
தமிழில்: 
அதிரை நியூஸ்: நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-