, ஜூன் 25
துபாய், சவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை பெருநாள் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பெருநாள் தினத்தின் முக்கிய நிகழ்வான ஈதுப் பெருநாள் திடல் தொழுகை துபாய், தெய்ரா, அல் பரஹா ஈத்கா மைதானத்தில் இன்று காலை 6 மணி அளவில் பன்னாட்டு மக்களும் பல்லாயிரக்கணக்கில் திரளாக கலந்து கொண்ட நிலையில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
இதேபோல் பர்துபையில் அமைந்துள்ள மைதானத்தில் நடைபெற்றது, இதில் துபை ஆட்சியாளர்கள் பங்கேற்று தொழுகை நடத்தி பெருநாள் குத்பா உரையாற்றுவது குறிப்பிடத்தக்கது.
அல் மைதானத்தில் நடைபெற்ற ஈதுப் பெருநாள் தொழுகைக்குப் ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டாடினர்.
துபையில் கடும் கோடையும் புழுக்கமும் நிலவி வரும் நிலையில் தொழுகை நேரத்தில் மெல்லிய தென்றல் வீசியதால் வியர்வை குளியலிலிருந்து தப்பினர்.
துபாய் பாத்திமா பள்ளி( பிஸ்மில்லா ரூம் ) ஈதுல் ஃபித்ரு பெருநாள் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்: ( படங்கள் )
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.