அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

இது ஏர் போர்ட்டோ அல்லது IT பன்னாட்டு நிறுவனமோ அல்ல.
மீன் மார்க்கெட்டாம்.
நம்ம ஊரில் அல்ல DEIRA DUBAI ல்!
துபாயில் நவீன வசதியுடன் கூடிய வாட்டர் பிரண்ட் மீன் மார்க்கெட் திறப்பு !

 ஜூன் 13
துபையில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய வாட்டர் பிரண்ட் மீன் மார்க்கெட் ஞாயிறு முதல் செயல்படத் துவங்கியது. தற்போது மீன் மார்க்கெட் மட்டுமே பழைய தேரா மீன் மார்க்கெட்டில் இருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காய்கறி பழங்கள் மற்றும் மாமிசங்கள் விற்கும் கடைகள் ரமலான் மாதம் வரை மட்டும் பழைய இடத்திலேயே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விரைவில் புதிய மீன் மார்க்கெட்டில் தேனீர் நிலையம், உணவகம், சூப்பர் மார்க்கெட் மற்றும் இதர சில்லறை விற்பனை நிலையங்களும் துவங்கப்படவுள்ளன.

புதிய மீன் மார்க்கெட் முற்றிலும் நவீன வசதிகளுடன் முழுமையாக ஏசி வசதியுடன் துர்நாற்றம் இன்றியும் மூடப்பட்ட கார் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது மேலும் மீன் மார்க்கெட் நிர்வாகத்தால் டிஜிட்டல் எலக்ட்ரானிக் தராசுகளும் வழங்கப்பட்டுள்ளன.

பழைய தேரா மீன் மார்க்கெட்டை விட இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது வாடகை என்றாலும் தேவையான ஐஸ், ரெப்ரிஜிரேட்டர், ஸ்டோரேஜ் வசதி, தண்ணீர், மின்சாரம் போன்ற வசதிகள் மீன் மார்க்கெட் நிர்வாகத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது. மீனை சுத்தம் செய்யும் பகுதியை தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதால் இனி மீன்களை சுத்தம் செய்ய கிலோவுக்கு 1 திர்ஹத்திற்கு பதில் 1.50 திர்ஹம் வசூலிக்கப்படும். அதேவேளை இரால், நண்டு, கணவாய் போன்றவைகளை சுத்தம் செய்ய பழைய கட்டணமான 3 திர்ஹம் மட்டுமே வசூலிக்கப்படும்.

அதேபோல் பெரிய மீன்களை வெட்டி சில்லறையாக விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளது, எந்த ஒரு மீனையும் முழுமையாகவே வாங்க வேண்டும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அதிரை நியூஸ்:


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-