அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
மருத்துவர்களால் குணமாக்க முடியாததை குணப்படுத்தியவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்று இயக்குநர் ஷங்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

சமீபத்தில் ஒரு கலந்தாய்வில் பேசிய இயக்குநர் ஷங்கர், தன் மகனுக்கு விரல் மற்றும் தாடை உடைந்து உடல்நிலை சரியில்லாமல் போனதால் மிகவும் வேதனை அடைந்ததாக கூறினார்.

அப்போது தன் மகனுடன் சென்னை மவுண்ட ரோட் தர்காவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தன்னை வரச்சொன்னதாகவும், அப்போது அவரும் அங்கு வந்து பிரார்த்தனை செய்ததால் தன் மகன் குணமடைந்ததாகவும் ஷங்கர் கூறியுள்ளார்.

இசையால் பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும் என்று பாரம்பரியமாக கூறப்பட்டு வரும் நிலையில், இசை பல்வேறு உளவியல் பிரச்சனைகளுக்கு மருந்தாவது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இசை மருத்துவராக ரசிகர்களால் அறியப்படும் ரஹ்மானை அவரது ஆஸ்தான இயக்குநர் ஷங்கர் புகழ்ந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-