அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
வி.களத்தூர். ஜூன் 22. 
இதுவரை வி.களத்தூர் பகுதி மக்கள் வி.களத்தூர் பெரிய ஜாமிஆ பள்ளி வாசலிலும், மில்லத் நகர் மக்கள் மில்லத் நகர் ஈத்கா மைதனத்திலும் தொழுது வந்தனார். இதனால் வி.களத்தூர் பகுதி மக்கள் மில்லத் நகர் நண்பர்களையும், மில்லத் நகர் பகுதி மக்கள் வி.களத்தூர் நண்பர்களுடன் ஒன்றாக தொழ முடியாமலும், முஸாபாக் செய்ய முடியாமலும், மேலும் பெரு நாள் வாழ்த்துக்களை பரிமாற்றம் செய்ய முடியாமலும் போனது. இதனால் வி.களத்தூர்- மில்லத் நகர் நண்பர்கள் ஒன்று கூடு ஒன்றாக தொழ வேண்டும் என்ற கோரிக்கையை நமதூர் ஜமாத் நிர்வாகிகள் இடம் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து ஜமாத் செயற்குழு கூடியது. இதற்கு பெரும்பாலான கொத்து நாட்டாமைகள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். 
பிறகு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியது. முதலில் ஐடியல் பள்ளி அருகே ஜாமிஆ காம்லக்ஸில் வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த இடம் சிறிய இடம். கல்லாற்றில் வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. வெயில் காரணமாக தொழுகை காலை 7 மணி அல்லது 7:30 நடத்த முடிவு செய்யப்பட்டது. தொழுகை முடித்து முசாபாக் மற்றும் பெருநாள் வாழ்த்துக்கள் பறிமாறி, தக்பீர் முழக்கத்துடன் வி.களத்தூர் பகுதி மக்கள் வி.களத்தூர் கபர்ஸ்தான்க்கு ஜியாரத் செய்ய வேண்டும். மில்லத் நகர் மக்கள் தக்பீர் தக்பீர் முழக்கத்துடன் மில்லத் நகர் கபர்ஸ்தான் சென்று ஜியாரத் செய்து களைய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. 

இன்று புனித லைலத்துல் கதிர் இரவில் அனைத்து பள்ளி வாசலிலும் இந்த ரமலான் பெருநாள் தொழுகை கல்லாற்றில் நடத்த நிர்வாகம் முடிவு செய்யப்பட்ட அறிவிப்பு பொது மக்களுக்கு தெரிவிக்கப் படடது. இதற்கு ஊர் மக்கள் கருத்தை நாளை ஜூம்மா தொழுகை முடிந்த உடன் மக்கள் கருத்து கேட்டவுடன் நேரம் பின்னர் பின்னர் அறிவிக்கப் படும்.
இன்ஷா அல்லாஹ்   நாளை ஜூம்மாவுக்கு பின் திடல் தொழுகையா? அல்லது ஜாமிஆ பள்ளியா ? முடிவு தெரிந்து விடும்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-