அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஜூன் 18
துபையில் புனிதமிகு ரமலான் மாதத்தில் டிரைவர்களால் நிகழ்த்தப்பட்ட சிறிய போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

சிறிய அளவிலான போக்குவரத்து குற்றங்களை நிகழ்த்தியவர்கள் மீண்டும் அத்தகைய குற்றங்களை செய்ய மாட்டேன் என உறுதிமொழி கடிதங்களை எழுதிக் கொடுத்துவிட்டு தங்களை தண்டனையிலிருந்து விடுவித்துக் கொள்ளலாம் ஆனால் அதே குற்றங்களை மீண்டும் செய்தால் மன்னிக்கப்பட்ட பழைய குற்றம் மீண்டும் பதிவு செய்யப்படும் என துபை போலீஸார் அறிவித்துள்ளனர்.

மன்னிப்பு கடிதம் எழுதித் தருபவர்களுக்கு சாலைவிதிகளை மதிப்பது பற்றிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் துபை போலீஸாரால் வழங்கப்படும்

புனித ரமலான் மாதத்தையொட்டி மன்னிக்கப்பட்டுள்ள குற்றங்களின் பட்டியல்:
1. வாகனத்தை செலுத்தும் போது மொபைல் போன் பாவித்தல்.
2. காலாவதியான வாகன உரிமத்துடன் வாகனத்தை ஓட்டுதல்.
3. போக்குவரத்திற்கு இடையூறாக வாகனத்தை நிறுத்துதல்.
4. எத்தகைய காரணமும் இன்றி சாலையின் நடுவே வாகனத்தை நிறுத்துதல்.
5. சீட் பெல்ட் அணியாதிருத்தல்.
6. இரவு நேரத்தில் விளக்குகள் இல்லாமல் வாகனத்தை இயக்குதல்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அதிரை நியூஸ்: 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-