அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 

போலி விளம்பரங்கள் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்குமாறு கத்தாரின் வர்த்தக மற்றும் வாணித்துறை அமைச்சு பொதுமக்களைக் கேட்டுள்ளது.
குறிப்பாக அரபு நாடுகளில் பொருட்கள் விற்பனைக்கான அதிகம் விளம்பரங்கள் வெளியிடப்படுவது வழமை. அந்த வகையில் வெளியிடப்பட்டும் விளம்பரங்களில் பெய்யான தகவல்கள் மற்றும் முறைகேடான செயற்பாடுகள் இடம்பெறுவதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த விளம்பரங்கள் தொடர்பான எச்சரிக்கையாக இருக்கும் படி அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளதோடு கத்தாரில் சேவை நிலையங்கள் (Serive Center) இல்லாத பொருட்கள், அனுமதிப்பத்திரம் வழங்கப்படாத பொருட்கள், பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்கள் போன்ற விடயங்களில் கவனம் செலுத்துமாறு கேட்டுள்ளது.
மேலும் ஆன்லைன் மூலமாக ஆடர் செய்து வாங்கும் போது பொருட்கள் பற்றி தெளிவான தகவல்கள், விற்பனை செய்யும் நிறுவனத்தின் தன்மை, இருப்பு போன்ற விடயங்களில் கவனம் செலுத்துமாறு கேட்டுள்ளதோடு எந்த விதமான பொருட்களை வாங்கினாலும் பற்றுச்சீட்டை(ரசீதை) தவறாமல் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுள்ளது.
பொருட்களை கொள்வனவு செய்பவர்கள் பொருட்கள் தொடர்பான சந்தேகங்கள் ஏற்பட்டால் முறைப்பாடுகளை உடனடியாக நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் எதிர்ப்பு வர்த்தக மோசடி துறை பிரிவுக்கு அறிவிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுள்ளது.
முறைப்பாடு செய்ய வேண்டி வழிமுறைகள் வருமாறு…
Hotline: 16001

e-mail: info@mec.gov.qa

Twitter: @MEC_Qatar

Instagram: MEC_Qatar

MEC mobile app for Android and IOS: MEC_Qatar
ஆங்கிலத்தில்:- கட்டார் டே

தமிழில்:- உண்மையின் பக்கம்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-