அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
: ஜூன் 15
அமீரக அரசு ஊழியர்களுக்கான ஈத் அல் பித்ர் எனும் ஈகைத் திருநாள் விடுமுறையை அமீரக அரசு ஊழியர்களுக்கான தேசிய மனிதவளத்துறை (The Federal Authority for government human resources) அறிவித்துள்ளது.

ஷஃபான் மாத முதல் பிறை காணப்படுவதன் அடிப்படையில் ரமலான் பிறை 29 (ஜூன் 24) உடன் நோன்பு நோற்பது நிறைவுற்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று (ஜூன் 25) பெருநாள் தினம் அனுசரிக்கப்படும்.

தொடர்ந்து திங்களும் செவ்வாயும் விடுமுறை தினங்களாகும் அதாவது வெள்ளி, சனி வார விடுமுறைகளுடன் சேர்த்து 5 தினங்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். மீண்டும் பணி புதன்கிழமை (ஜூன் 28) முதல் ஆரம்பமாகும்.

ரமலான் பிறை 30 ஆக பூர்த்தியானாலும் பெருநாள் விடுமுறை ஞாயிறு (ஜூன் 25) அன்று முதல் துவங்கி சனிக்கிழமை (ஜூலை 1) அன்று நிறைவுறும்.

மீண்டும் பணி அடுத்த ஞாயிறு (ஜூலை 2) முதல் ஆரம்பமாகும் அதாவது முன் பின் வெள்ளி, சனி விடுமுறைகளையும் சேர்த்து 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

தனியார் நிறுவனங்களுக்கான விடுமுறை அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அதிரை நியூஸ்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-