அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இரண்டு லிப்ட்டுகளும் கடந்த பல மாதங்களாக இயங்காததால் மாற்றுத்திறனாளிகளும், முதியோரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைகேட்புக் கூட்டம் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த வளாகத்தின், முதல் மற்றும் 2 ஆம் தளங்களில் பிரதான அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களின் வசதிக்காக இரண்டு லிப்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், இவை இரண்டும் கடந்த பல மாதங்களாகவே பயன்பாட்டில் இல்லை. இதனால், மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். முதல் மற்றும் 2 ஆம் தளத்துக்கு படிகளின் வழியே சிரமப்பட்டு வந்து செல்கின்றனர். இதுகுறித்து, பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் நலன் கருதி உடனடியாக லிப்ட்டுகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சக்கர நாற்காலி வசதி செய்து தர வலியுறுத்தல்:
தமிழக அரசின் உத்தரவின் பேரில், அரசு அலுவலகங்களில் மாற்றுத் திறனாளிகள் வந்து, செல்வதற்கு வசதியாக சாய்வு தள மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நாள்தோறும் மாற்றுத்திறனாளிகள் உள்பட ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மேலும், மாற்றுத் திறனாளிகளுடன் வரும் உதவியாளர், அவர்களை தூக்கி செல்லும் நிலை உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல, மாற்றுத் திறனாளிகள் வந்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சாய்வுதளம் அருகே இரு சக்கர வாகனங்களை நிறுத்திச் செல்வதால், அந்த வழித்தடத்தை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, மாற்றுத் திறனாளிகள் தங்களது மூன்று சக்கர வாகனங்களில் வந்து செல்ல வசதியாக அமைக்கப்பட்டுள்ள பாதையருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-