அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
 ஜூன் 12
துபை போக்குவரத்துத் துறை போக்குவரத்துத் துறை (RTA) போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்கும், போக்குவரத்து தொடர்புடைய பிற சேவைகளை பெறுவதற்கும் பல்வேறு எளிய வசதி வாய்ப்புக்களை அறிமுகம் செய்துள்ளதன் நீட்சியாக தற்போது போன் மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதியை என்ற Ayava தொழிற்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளது.

சோதனை அடிப்படையில் முயற்சிக்கப்பட்டு திட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. துபை போக்குவரத்துத் துறையின் கால் சென்டர் எண்ணை (Payment Gateway of RTA Call Centre (8009090) தொடர்பு கொண்டு உங்கள் கிரடிட் கார்டு வழியாக போக்குவரத்து அபராதங்களை செலுத்தலாம்.

மேலும், துபை போக்குவரத்துத் துறையின் IVR சிஸ்டத்தை தொடர்பு கொண்டு போக்குவரத்து அபராதம் செலுத்துவதுடன் ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், தொலைந்த அல்லது பழுதான ஓட்டுனர் உரிமத்திற்கு பதில் புதிதாக ஒன்றைப் பெற, வாகன உரிமம் புதுப்பித்தல், தொலைந்த அல்லது பழுதான வாகன உரிமத்திற்கு பதில் புதிதாக ஒன்றைப் பெற, புதிதான வாகனப் பதிவுகளும் செய்திடலாம்.(The new system allows customers to use the IVR System of the call centre)

இந்தத் திட்டம் முற்றிலும் பாதுகாப்பானது என்றும் இணைய உலக திருடர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டது என்றும் வேறு யாராவது உங்களுடைய கிரடிட் கார்டுகளை உபயோகப்படுத்தினால் சம்பந்தப்பட்ட துறையை எச்சரிக்கும் தொழிற்நுட்பங்களை உடையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News

தமிழில்: 
அதிரை நியூஸ்:நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-