அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...துபையில் ஈத் அல் பித்ர் எனும் ஈகைப் பெருநாள் விடுமுறைகளின் போது வழமைபோல் இலவச பார்க்கிங் நடைமுறையில் இருக்கும் என துபை போக்குவரத்துத் துறை (RTA) அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூன் 25 – ஞாயிற்றுக்கிழமை அன்று பெருநாள் தினமாக இருந்தால் நாளை மறுநாள் சனிக்கிழமை (ஜூன் 23) முதல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) வரை இலவச பார்க்கிங் நடைமுறையில் இருக்கும். மீண்டும் புதன்கிழமை (ஜூன் 28) காலை முதல் கட்டண பார்க்கிங் நடைமுறைக்கு வரும்.

ஒருவேளை திங்கட்கிழமை (ஜூன் 26) பெருநாள் தினமாக இருந்தால் சனிக்கிழமை (ஜூன் 23) முதல் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) வரை இலவச பார்க்கிங் நடைமுறையில் இருக்கும். சனிக்கிழமை (ஜூலை 1) முதல் மீண்டும் கட்டண பார்க்கிங் நடைமுறைக்கு வரும்.

துபை மெட்ரோ:
இன்று வியாழன் (ஜூன் 22) முதல் திங்கள் (ஜூன் 26) வரை நள்ளிரவு 2 மணி (அடுத்த நாள் அதிகாலை) வரை சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

துபை டிராம்:
சனிக்கிழமை (;ஜூன் 24) காலை 6.30 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை (அடுத்த நாள் அதிகாலை) வரை எதிர்வரும் வியாழன் (ஜூன் 29) வரை சேவை வழங்கும்.

அபுதாபியிலும் பெருநாள் விடுமுறையில் இலவச பார்க்கிங் வசதி !

அதிரை நியூஸ்: ஜூன் 22
அபுதாபியில் ஈத் அல் பித்ர் எனும் ஈகைப் பெருநாள் விடுமுறைகளின் போது வழமைபோல் இலவச பார்க்கிங் நடைமுறையில் இருக்கும் என அபுதாபி ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (Integrated Transport Center) அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூன் 25 – ஞாயிற்றுக்கிழமை அன்று பெருநாள் தினமாக இருந்தால் நாளை மறுநாள் சனிக்கிழமை (ஜூன் 23) முதல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) வரை இலவச பார்க்கிங் நடைமுறையில் இருக்கும். மீண்டும் புதன்கிழமை (ஜூன் 28) காலை 8 மணிமுதல் கட்டண பார்க்கிங் நடைமுறைக்கு வரும்.

ஒருவேளை திங்கட்கிழமை (ஜூன் 26) பெருநாள் தினமாக இருந்தால் சனிக்கிழமை (ஜூன் 23) முதல் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) வரை இலவச பார்க்கிங் நடைமுறையில் இருக்கும். சனிக்கிழமை (ஜூலை 1) 8 மணிமுதல் மீண்டும் கட்டண பார்க்கிங் நடைமுறைக்கு வரும்.

அபுதாபி பஸ்:
அபுதாபி – அல் அய்ன் இடையேயான பஸ் சேவை தவிர்த்து மற்றவை அனைத்தும் வழமை போல் இயங்கும். போக்குவரத்து சம்பந்தமான சந்தேகங்களுக்கு 80088888 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

அபுதாபி ஆடு மாடுகள் அறுவைகூடம்:
பெருநாள் விடுமுறை நாட்களின் போது தினமும் அதிகாலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை அபுதாபி சிட்டியிலுள்ள ஆடு மாடுகளின் அறுவைக் கூடம் இயங்கும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அதிரை நியூஸ்: ஜூன் 22

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-