அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
வி.களத்தூர் ஜாமியா வணிக வளாகத்தில் (ஐடியல் பள்ளி அருகில்) நாளை இரவு மாபெரும் சஹர் விருந்து ஏற்பாடு செய்யப்பட உள்ளது ( நாளை 18-06-2017)


வி.களத்தூரில் இந்த சஹர் விருந்து ஏற்பாடு கடந்த 2006 ஆண்டில் இருந்து சிறப்பாக நடைபெற தொடங்கியது 2006ஆம் வருடம் இரண்டு சங்கத்தின் இளைஞர்களுடன் சேர்த்து சுமார் 100 பேருக்கு சஹர் விருந்து கொடுக்கப்பட்டது.
முதலில் இரண்டு சங்கத்து இளைஞர்களுக்கும் சஹர் விருந்து பரிமாரப்பட்டது பிறகு படிப்படியாக ஊரில் உள்ள அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் என்று வருடம் வருடம் அதிகரிக்கப்பட்டுள்ளது.  கடந்த சில வருடமாக  வீட்டிக்கு ஒருவர் பின் , வீட்டில் உள்ள ஆண்கள் அவைவருக்கும் என இந்த சஹர் விருந்து வளர்ந்து விட்டன.


  இன்ஷா அல்லாஹ் இந்த வருடமும் இறைவனின் கிருபையால் நடைபெற உள்ளது. இந்த விருந்திற்கு வி.களத்தூர் இஸ்லாமிய பொது மக்கள் அனைவரையும் அழைக்கப்பட்டுள்ளது.
சுமார் 1500 பேருக்கு இந்த விருந்து ஏர்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே ஊரில் உள்ள அனைத்து ஆண்களும் தவறாமல் கலந்து கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறோம்.
 18-06-2017 அதிகாலை 2.30 முதல் 4.15  மணி வரை இந்த விருந்து நடைப்பெறும்.
இவ்விருந்தினை நல்ல உள்ளம் உள்ள சில நபர்கள் ஒன்றுசேர்ந்து நடத்துகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-