அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...







கிடப்பில் போடப்பட்டுள்ள கல்லாற்று தடுப்பணை திட்டத்தை தொடங்க வேண்டுமென விவசாயிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க 5-வது வட்ட மாநாடு வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் வட்டத் தலைவர் சி. கோவிந்தன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கரும்பு விவசாயிகள் மாவட்ட தலைவர் எ.கே. ராஜேந்திரன், முன்னாள் சி.பி.எம் வட்ட செயலர் சுபா. தங்கராசு, விவசாய தொழிலாளர் சங்கத் தலைவர் கே. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் என். செல்லதுரை சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், கிடப்பில் போடப்பட்டுள்ள சின்னமுட்லு நீர்த்தேக்க திட்டத்தை மத்திய அரசின் நீர்ப்பாசனக்குழு ஆய்வு செய்து, பணிகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வி.களத்தூர் கல்லாற்றில் ரூ. 8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ள தடுப்பணை கட்டும் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
அனுக்கூர்குடிகாடு கிராமத்திலிருந்து வாலிகண்டபுரம் வரை தார் சாலை அமைத்து தர வேண்டும். வி.ஆர்.எஸ்.எஸ்.புரம் கோனேரி ஆற்றில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும்.
வேப்பந்தட்டை வட்டத்தில் மின் மோட்டார்கள், அடி பம்புகள் பழுதாகி குடிநீருக்கு பொதுமக்கள் சிரமப்படுவதை தடுத்து, தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், ஒன்றிய தலைவராக ஆர். சாமிதுரை, செயலராக எஸ். சரவணன், பொருளாளராக சி. கோவிந்தன், துணைத்தலைவராக
எ. செங்கமலை, துணைச் செயலராக பி. ராமச்சந்திரன் உள்ளிட்ட 13 பேர் ஒன்றியக்குழு நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-