அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஜூன் 27
அமீரகம் 2017 ஆம் ஆண்டை வழங்கி மகிழும் ஆண்டாக (Year of Giving) அறிவித்து பல்வேறு நற்காரியங்களில் ஈடுபட்டு வருவது அறிந்ததே, அதன் தொடரில் ஒன்றாக 2016 ஆண்டு மற்றும் அதற்கும் முன்பாக நிகழ்த்தப்பட்ட அனைத்து போக்குவரத்து குற்றங்களுக்காக விதிக்கப்பட்டு தற்போது வரை செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள அபராதங்களை 50% தள்ளுபடி சலுகையுடன் செலுத்த துபையின் ஆட்சியாளர் ஷேக் முஹமது பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள் உத்தரவிட்டுள்ளதாக துபை போலீஸ் துறையின் தலைவர் மேஜர் ஜெனரல் அப்துல்லா கலீபா அல் மெர்ரி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

இந்த சலுகை 2017 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட அபராதங்களுக்கு பொருந்தாது. மேலும், துபை போக்குவரத்து துறை அபராதங்களை செலுத்துவதற்காக ஏற்படுத்தியுள்ள அமைப்புக்களான போக்குவரத்து துறை அலுவலகங்கள், துபை போலீஸ், வாகனப் பதிவு மையங்கள், வங்கிகளின் ஆன்லைன் தளங்கள் மற்றும் பல்வேறு அரசு சேவைத்துறை அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி இயந்திரங்கள் (Kiosk) ஆகியவற்றின் மூலம் செலுத்தலாம் என்றும், இங்குள்ள இயந்திரங்கள் மற்றும் ஆன்லைன் சேவை அமைப்புக்கள் அனைத்தும் 50 சதவிகித கட்டணங்களை மட்டுமே தெரிவிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்றும் அல் மெர்ரி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Source: Gulf News
தமிழில்: 
அதிரை நியூஸ்:  நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-