அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காடு,வி.களத்தூர்,பகுதியில் நாளை வியாழன்கிழமை (ஜூன் 22) மின் விநியோகம் இருக்காது. பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு மற்றும் கழனிவாசல் தானியங்கி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இந்த மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் வாலிகண்டபுரம், தேவையூர், மங்களமேடு, சின்னாறு, பெருமத்தூர், குன்னம், வரகூர், பொன்னகரம், பரவாய், நன்னை, வேப்பூர், எழுமூர், கிளியூர், வைத்தியநாதபுரம், அயன்பேரையூர், வி.களத்தூர், டி.கீரனூர், திருமாந்துறை, லப்பைக்குடிக்காடு, சு.ஆடுதுறை, ஓகளூர், அந்தூர், கல்லம்புதூர், சின்ன வெண்மணி, பெரியம்மாபாளையம் ஆகிய கிராமங்களில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என, லப்பைக்குடிக்காடு மின் வாரிய உதவி செயற்பொறியாளர் க. அறிவழகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
நாளை இரவு லைலத்துல் கதிர் இரவாக இருப்பதால் முன் கூட்டியே வாசகர்களுக்கு அறிவிக்கிறோம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-