அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ஐஸ்லாந்து(10 ஜூன் 2017): ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஐஸ்லாந்து உலகிலேயே அதிக நேரம் நோன்பு வைக்கும் நாடு என அறியப்படுகிறது.


முஸ்லிம்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் நோன்பு வைக்கும் கால அளவு, ஆசியாவை பொறுத்தவரை 14 முதல் 15 மணி நேரம் வரை உள்ளது. ஆனால் சுமார் 22 மணிநேரம் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஐஸ்லாந்து நாட்டினர் உண்ணாமல் பருகாமல் குடிக்காமல் இருக்க வேண்டும். இதுவே உலகின் அதிக நேரம் நோன்பு வைக்கும் நாடாகும்.

முஸ்லிம்களில் மிக குறைவான மக்கள் கொண்ட இந்நாட்டில் உள்ள இஸ்லாமிக் ஃபவுண்டேஷன் தலைவர் அப்துல் அஜீஸ் உல்வானி கூறுகையில், " நாங்கள் இவ்வளவு நேரம் நோன்பு வைப்பதால் எங்களுக்கு சிரமம் இல்லை, எல்லா முஸ்லிம் மக்களை போன்று தராவீஹ் முதல் அனைத்து வழிபாடுகளும் செய்கிறோம். ஆரம்பத்தில் சில நாட்கள் சிரமமாக இருந்தது. ஆனால் பின்பு அது பழகிவிட்டது." என்றார்.

இதேபோல அதை சுற்றியுள்ள நாடுகளிலும் 21 மணிநேரம், 20 மணிநேரம் என நோன்பு வைக்கின்றனர்.

Icelandic capital Reykjavik, Muslims are observing longest fast in the world. The fasting lasts for 22 hours in this country. Iceland is one of the countries with the smallest Muslim communities.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-