அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வி.களத்தூர். ஜூன் 26. தமிழகம் முழுவதும் நேற்று பல பகுதியில் பரவலாக பிறை தென்பட்டதை தொடர்ந்து இன்று ரம்ஜான் பண்டிகை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வி.களத்தூரில் இன்று காலை முதல் நமது ஊர் மக்கள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடன் புத்தாடை அணிந்து பெருநாளை கொண்டாடி வருவதை காணமுடிந்தது.

நமதூர் ஜாமிஆ பள்ளிவாசலில் காலை 8:30 மணிக்கு பெருநாள் சிறப்பு தொழுகையும் நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையை வி.களத்தூர் தலமை இமாம் மௌலவி அப்துல் ராஷித் ஹஜ்ரத் அவர்கள் தொழுகை நடத்தினார்கள். துணை இமாம் பஷீர் அஹம்மது அவர்கள் குத்பா பேருரை ஆற்றினார். பின் அப்துல் ராஷித் ஹஜ்ரத் அவர்கள் இந்த ரமலான் மாதம் செய்த அமல்கள் வருடம் முழுவதும் அனைவரும் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். பின் மௌலவி M.H நூருல்லா ஹஜ்ரத் அவர்கள் நாம் தினசரி பெரம்பலூர், திருச்சி, போன்ற நகரங்களில் மாற்று மத சகோதரர்கள் ஹோட்டல் கடைகளில் ஹலால் என எழுதப்பட்டுள்ளது.ஆனால் அவை உண்மையிலேயே ஹலால் இல்லை. எனவே அதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஹலால் என்ன என்பதை நமது ஊர் மக்களுக்கு எளிய முறையில் விளக்கம் அளித்தார். இந்த சிறப்பு தொழுகைக்கு சிறியவர் முதல் பெரியர்கள் அனைவரும் வந்திருந்து தங்களது தொழுகையை நிறைவேற்றினார்கள். பள்ளிவாசல் இடம் நிரம்பி வெளியிலும் மக்கள் தொழுதனார்.
தொழுகைக்கு பிறகு ஒருவருக்கொருவர் தங்களை கட்டித்தழுவியும் வாழ்த்துக்களையும்தெரிவித்துக்கொண்டனர். . 
பின் அனைவரும் கபஸ்தான் சென்று கபர் ஜியாரத் செய்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதன் புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு.... .


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-