அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், மே 9:
பெரம்பலூர் அருகே டாஸ் மாக் கடையை அகற்ற வலியுறுத்தி தமுமுக, எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இண்டியா அமைப்புகள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இயங்கி வந்த 16 டாஸ் மாக் மது பானக்கடைகள் மார்ச் 31ம்தேதி மூடப்பட்டன. ஆனால் மாவட்ட நிர்வாகம் டாஸ் மாக் கடைகளை பல இடங்களில் திறக் கும் முயற் சிக்கு பொது மக் கள் தரப் பில் எதிர்ப்பு கிளம்பி போராட் டங் கள் நடத் தப் பட்டு வரு கி றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் செஞ்சேரி, அரு மடல் பிரிவுரோ, கவுல் பாளையம், பாடாலூர், பெரிய வெண்மணி உள்ளிட்டப் பல்வேறு இட ளில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை ம றியல், முற்றுகை, பூட்டு போடுதல், தர்ணா உள்ளிட்டப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரு கின்றனர். மாவட்ட நிர்வாகம் போலீ சா ரைக் கொண்டு மக்களை மிரட்டும் செயலில் ஈடு பட்டுள்ளது.
இந் நி லை யில் பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் இருந்து அகற் றப் பட்ட டாஸ் மாக் கடை அதற்கு அருகிலேயே வயல்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அரு கி லுள்ள கோனேரிபாளையம் ஊராட்சி முத்து நகர் பகுதி பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது வரை 3 முறை சாலை ம றியல் நடத் தி யுள் ள னர். இருந் தும் அந் தக் கடையை அங் கி ருந்து அகற் றா த தால் தொடர்ந்து போராட் டங் கள் நடந்து வரு கி றது. நேற்று தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் குதரத்துல்லா தலை மை யில் கடையை முற் று கை யிட்டு போராட் டம் நடத் தி னர்.
இதில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இன்டியா, எஸ் டி பிஐ அமைப் பு க ளும் இணைந்து போரா டின. இதனை கண் டு கொள் ளா மல் டாஸ் மாக் கடை யில் வழக் கம் போல் விற் பனை நடந் தது. இது கு றித்து தக வல் அறிந்து டிஎஸ்பி கார்த்திக், இன்ஸ்பெடர் சிவக்குமார், டாஸ் மாக் உதவி மேலாளர் சித்ரா உள்ளிட்டோர் நேரில் சென்று பேச் சு வார்த்தை நடத் தி னர். அப் போது போராட் டக் குழு வி னர் கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட் டத் தில் ஈடு பட்ட வாறு, கடையை 2 நாளில் அகற்ற வேண் டும் என கெடு வி தித் த னர்.
அது கு றித்து மாவட்ட நிர் வா கத் தி டம் பேசி நட வ டிக் கைக்கு ஏற் பாடு செய் யப் படு மென காவல் துறை, டாஸ் மாக் துறை உறு தி ய ளித் த தன் பேரில் தர்ணா போராட்டம் கைவி டப் பட் டது. இதில் தமுமுக, பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இண்டியா, எஸ்டிபிஐ அமைப்புகளைச் சேர்ந்த மாவட்ட, ஒன் றிய, நகர நிர்வாகி கள் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-