அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வெயிலை தாங்க முடியாமல் மயங்கி விழுந்த முதியவர் சாவு
மே 17, 2017, 03:45 AM

,

பெரம்பலூர் புதியபஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சம்பத்தன்று 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாப்பிட்டு விட்டு வெளியே வந்து நின்றார். அப்போது வெயிலின் கொடுமையை தாங்கி கொள்ள முடியாமல் திடீரென அந்த முதியவர் மயங்கி கீழே விழுந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த முதியவர் இறந்தார். வெயிலின் கொடுமையால் இறந்த அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-