அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துகஹு...
நேற்று (29-5-17) மாலை பெரம்பலூர் மாவட்டத்தில் தமுமுக சார்பாக இறைச்சிக்காக மாடு அறுக்க தடை விதித்த மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வை தமுமுக மாவட்ட செயலாளர் குதரத்துல்லா தலைமையேற்று நடத்தினார்,
தமுமுக நகர செயலாளர் முஹம்மது இஸ்மாயில் வரவேற்புரை நிகழ்த்தினார்,
மாவட்ட, ஒன்றிய, மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும் முன்னிலை வகித்தனர்,
*கண்டன உரை*
தமுமுக கழக பேச்சாளர் தி.நகர் அ. பிஸ்மில்லாஹ் கான் அவர்கள்,
பகுஜன் சமாஜ் மாநில செயலாளர் வழக்கறிஞர் ப.காமராசு அவர்கள்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் அணியின் மாநிலத் துணைச் செயலாளர் பேரா. முருகையன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர் இறுதியாக ம.ம.க வின் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முஹம்மது ஹனிபா நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.