அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஏப்-30
துபையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பல்வேறு மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் ஷேக் ஜாயித் நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து தேக்கத்தை பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஷேக் ஜாயித் ரோட்டிலும் அதனோடு இணையும் துணை சாலைகளிலும் சிக்னல்களால் ஏற்படும் போக்குவரத்து தேக்கத்தை சரிசெய்ய புதிய பல அடுக்கு பைபாஸ் மேம்பாலங்கள் அமைக்க திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

சுமார் 800 மில்லியன் திர்ஹம் செலவில் அமையவுள்ள இந்த பைபாஸ் பல அடுக்கு மேம்பால சாலைகள் ஜூமைராவிலிருந்த துவங்கி அல் கைல் (வடக்கு) பகுதியில் நிறைவடையவுள்ளன. இந்த மேம்பாலங்கள் தற்போது 2 மற்றும் 3 ஆம் இன்டர்சேஞ்ச் இடையில் அமையவுள்ளன.

இதன் முதற்கட்டப் பணிகள் ஏற்கனவே நடந்து வரும் நிலையில் அது 2018 ஆம் ஆண்டு நிறைவுறும் என்றும், 2 மற்றும் 3 ஆம் கட்டப்பணிகள் 2019 ஆம் ஆண்டிற்குள் முழுமையடையும் என துபை போக்குவரத்துத் துறை
அறிவித்துள்ளது .


நன்றி ;அதிரை நியூஸ்: 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-