அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
பெரம்பலூர் : பெரம்பலூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு 116 கடைகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடந்தது. பெரம்பலூர்-துறையூர் சாலையில் நேற்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் 3 கிமீ நீளத்திற்கு சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. உதவி கோட்ட செயற்பொறியாளர் வீரப்பன், உதவிப்பொறியாளர் கலைராஜா மேற்பார்வையில், 40க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.

இதில் பாலக்கரையில் தொடங்கி, வெங்கடேசபுரம், ஸ்டேட்வங்கி, ரோவர்ஆர்ச், சங்குப்பேட்டை, தேரடி, பெரியகடைவீதி, கனராவங்கி, அரசு தலைமை மருத்துவமனை, அரசு மேல்நிலைப் பள்ளி, கல்யாண்நகர், அரணாரை பிரிவுரோடு வழியாக பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட சுவாமி தியேட்டர் வரையிலுள்ள சாலையின் இரு புறங்களிலும் இருந்த 116 கடைகளில் காணப்பட்ட ஆக்கிரமிப்புகள், கடைகளின் முகப்பு சுவர்கள், தாழ்வாரங்கள், சாலையோர பெட்டிக்கடை, தரைக்கடை ஆகியன அகற்றப்பட் டன.

மேலும் ஆக்கிரப்பு தொடர்ந்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என ஆக்கிரமிப்பாளர்களிடமும், வர்த்தகப் பிரமுகர்களிடமும், நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களும் அகற்றப்பட்டன. இதனையொட்டி பெரம்பலூர் போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-