அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
 

பெரம்பலூர் : பெரம்பலூர் பகுதியில் விதிமுறைகளை மீறும் ஷேர்ஆட்டோக்கள். நடவடிக்கை எடுக்ககோரிக்கை விடப்பட்டுள்ளது.
சாலைப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ரூ36 லட்சம் மதிப்பீட்டில் ஏசி வசதியுடன் நவீனமயமாக்கப்பட்ட காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. இது கடந்த மாதம் திருச்சி ஐஜி வரதராஜு திறந்து வைத்தார்.

குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், குறிப்பாக நகரில் போக்குவ ரத்தை சீரமைக்க பொறுத்தப்படுவதாக காவல்துறையால் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட அளவில் 62 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்துவதாகவும், அதில் பெரம்பலூர் நகரில்மட்டுமே 28 இடங்களில் கேமராக்கள் பொறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பெரம்பலூர் நகரில் போக்குவரத்தை சீரமைத்திட இதுவரை எந்த நட வடிக்கையையும் போக்குவரத்து போலீசார் எடுக்கவில்லை. நவீன காவல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்ட நிலையில், சிசிடிவி கேமராக்கள் துணையுடன் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.

இதனால் கட்டுப்பாடின்றி இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்கள் போக்குவரத்திற்கு இடையூறாகவே இருந்து வருகின்றது. பழைய பஸ்டாண்டு காந்தி சிலை ரவுண்டானா அருகே பயணிகளை ஏற்றும் ஷேர் ஆட்டோக்கள் தங்களது வண்டி யில் ஆட்கள் நிரம்பும்வரை அவ்வழியே வேறெந்த வாகனங்களையும் விடுவதில்லை.

ஷேர் ஆட் டோக்களை ஒழுங்குப்படுத்தும்விதமாக மாவட்ட காவல்துறை இனியாவது முழுவீச்சில் பணியாற்ற, மாவட்டகலெக்டர் நந்தகுமார், பெரம்பலூர் காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் பலரும் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத் துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-