அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,மே 25: 
பெரம்பலூர் அருகே திருமணம் ஆசை காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்தார். இந்த வழக்கில் வாலிபரின் தாயாரும் கைதானார்.  
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, வி.களத்தூர்  மேற்குத்தெருவை சேர்ந்தவர் நூர்ஜஹான் (52). இவரது மகன் முஹம்மது அப்துல்லா (24). கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர்களது வீட்டிற்கு, உறவினர் மகள் 16 வயது சிறுமி வந்து தங்கியிருந்தாள். சிறுமியிடம் முஹம்மது அப்துல்லா திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் திருமணம் செய்து கொள்ள வில்லை. தற்போது சிறுமி கர்ப்பிணியாக உள்ளார். இது கு றித்து சிறு மி யின் தாயார், பொரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் படி போலீஸ் இன்ஸ் பெக்டர் (பொ) வனிதா வழக்குப் பதிவு செய்து,முஹம்மது அப்துல்லா மற்றும் அவரது செயலுக்கு உடந்தையாக இருந்த நூர் ஜஹான் ஆகியோரை கைது செய்தனர். 2 பேரையும் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். அதில் முஹம்மது அப்துல்லா சிறையில் அடைக்கப்பட்டார். நூர்ஜஹான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-