அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக திஷா மித்தல் பொறுப்பேற்றார்
மே 18, 2017, 04:00 AM

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சோனல்சந்திரா, சென்னை சிவில் சப்ளை சி.ஐ.டி. சூப்பிரண்டாக பணிமாறுதல் பெற்றார். இதையடுத்து திருப்பூர் மாநகர துணை போலீஸ் கமிஷனராக(சட்டம் மற்றும் ஒழுங்கு) பணியாற்றி வந்த திஷா மித்தல், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் திஷா மித்தல் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நேற்று பொறுப்பேற்று கொண்டார். புதிய போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற திஷா மித்தலுக்கு மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

வி.களத்தூர் வருகை!
வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூரில் நடக்கும் சந்தனக் கூடு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், தமிழ் நாடு சீருடைப் ப ணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுக் கான ஏற் பா டு கள் குறித் தும் கேட்டறிந்து சிறுவாச்சூர், வி.களத்தூர் பகுதிகளுக்கு நேரில் சென்றும் பார்வையிட்டார்.
பெரம்பலூர் மாவட்ட ஏடி எஸ் பிக் கள் ஞான சிவக்குமார், (மது விலக்கு) தங்க வேல், டிஎஸ்பிக்கள் (சட்டம் ஒழுங்கு) கார்த்திக், (மங்கள மேடு) ஜவஹர்லால் (டிசிபி) மோகன் தம்பி ராஜன் (டிசிஆர்பி) குமர வேல் மற் றும் இன்ஸ் பெக்டர்கள் சிவக்குமார், சிவ சுப்ரமணியன், ராஜ் குமார் மற்றும் குன்னம், மங்கள மேடு, அரும்பாவூர், தனிப்பிரிவு ஆயு தப் படை, அனைத் து ம க ளிர் காவல் நி லைய இன்ஸ் பெக்டர்கள், வி.களத்தூர், கைகளத்தூர், மருவத்தூர் எஸ் ஐக் கள் உட னி ருந் த னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-