அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


நீலகிரி

மலைகளின் அரசியான ஊட்டி இருக்கும் மலைத் தொடர்ச்சி தான் நீலகிரி. நீ லகிரி மலையைக் காண்பதற்கு நீலமாக இருப்பதால்,’நீலகிரி’ என அழைக்கப்படுகிறது. மலைகளின் அரசியான ஊட்டி சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாகத் திகழ்கிறது. உடலை வருடும் இதமான தென்றல், பச்சைப்பசலென நீண்ட நெடிய அரிய வகை மரங்கள், அதனை சுற்றி படர்ந்துள்ள செடி, கொடிகள் இவையெல்லாம் ஊட்டியின் அக்மார்க் முத்திரைகள். உதகமண்டலம் என்ற பெயருக்கு பல வகைகள் காரணங்களாக கூறப்படுகின்றன. கிழக்கில் கோயம்புத்தூர், பெரியார் மாவட்டங்களையும்; மேற்கிலும், தெற்கிலும் கேரள மாநிலத்தையும்; வடக்கில் கர்நாடக மாநிலத்தையும் கொண்டு விளங்குகிறது நீலகிரி. மொத்தத்தில் நீலகிரியை மலைவாசஸ்தலங்களின் ராணி என்றும் சொல்லலாம்.பிளாக் தண்டர்

உதகை மலையடிவாரத்தில் இதமான சூழலில் ஊட்டிக்கு செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது பிளாக் தண்டர் என்னும் கேளிக்கை பூங்கா. இங்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழத்தக்க வகையில் பல்வேறு வகையான தண்ணீர் விளையாட்டுகளும், பொழுது போக்கு விளையாட்டுகளும் அதிகம் உள்ளன. இங்கு பொருட்களை பாதுகாப்பதற்காக ஒரு தனிப்பட்ட அறை ஒன்றும் வழங்கப்படுகிறது. இங்குள்ள அனைத்து விளையாட்டுகளையும் காணும் வகையில் வழிகாட்டி ஒருவர் உடன் வருவார். இங்கு வருபவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். இது கோயமுத்தூர் அருகில் ஊட்டிக்கு செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. மேட்டுபாளையம் இரயில் நிலையத்திலிருந்து 4.4 கீ.மீ தொலைவில் பிளாக் தண்டர் அமைந்துள்ளது. பிளாக் தண்டரிலிருந்து 4.1கீ.மீ தொலைவில் அமைந்துள்ளது மேட்டுபாளையம் இரயில் நிலையம்.குன்னூர்

உதகை நோக்கி மலையில் பயணிக்கும் போது 20 கீ.மீ தொலைவில் குன்னூர் நகரம் உள்ளது. உதகையில் சில நாட்கள் தங்கி இருந்து,பார்த்து வர விரும்புவோர் குன்னூரில் தங்கி கொள்ளலாம். இதன் மூலம் விடுதி தொகையை ஓரளவு சிக்கன படுத்தலாம். பார்த்து பரவசபட பல இடங்கள் உள்ளன குன்னூரில். சிறுவர்களுக்கேற்ற பூங்காக்களும் அமைந்துள்ளது.சிம்ஸ் பூங்கா

தமிழக தோட்டகலை பராமரிப்பிலுள்ள சிம்ஸ் பூங்கா குன்னூரின் மேல் பகுதியில் உள்ளது. அழகாக வடிவமைக்கப்பட்ட புல்வெளிப் பாதைகள், அழகிய மலர்ப்படுகைகள், அரிய வகை மூலிகைகள், செடிகள், மரங்கள் என இயற்கையின் சுரங்கம்போல் காட்சியளிக்கும். இந்த பூங்காவில் கண்னை கவரும் பூக்களும் அழகிய தோட்டங்களும் அமைந்துள்ளன. இங்கு பங்குனி மாதங்களில் காய்கறிகள் கண்காட்சி நடைபெறும். கட்டணம் பெரியவர் ரூ.5 சிறியவர் ரூ.2.கேமரா ரூ.25. வீடியோ கேமரா ரூ.500.லாஷ் நீர்வீழ்ச்சி

குன்னூரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள அருவி பாறைகள் நிறைந்தது. பார்த்து ரசிக்கலாம். குளிக்க முடியாது. அடர்ந்த மலைகளும் காடுகளும் நிறைந்த இந்த லாஷ் நீர்வீழ்ச்சி இயற்கையை இரசிப்போருக்கான ஒரு இடம் இயற்கையை இரசிப்போருக்கு இங்கிருந்து நகர மனம் வராது.லாம்ஸ் பாறைமுனை

பாதுகாக்கபட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள லாம்ஸ் பாறைமுனை குன்னூரிலிருந்து 8 கீ.மீ தொலைவில் அமைந்துள்ளது.இங்கிருந்து பார்த்தால் புலியாறு,காட்டாறு, தேயுலை தோட்டங்களையும் மனங்குளிற கண்டு களிக்கலாம்.பகாசூரன் மலை

குன்னூரிலிருந்து சுமார் 12 கீ.மீ தொலைவில் உள்ள இம்மலை அழகிய வனச்சூழலில் அமைந்துள்ளது.மாவீரன் திப்பு சுல்தான் கட்டிய மாபெரும் கோட்டை இங்கு உள்ளது.காட்டேரி அருவி

உதகையில் உள்ள மனங்கவரும் நீர்வீழ்ச்சிகளில் ஒன்று. நீலகிரி மலையின் முன்றாவது பெரிய அருவி

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-