அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...இதுதான் மதநல்லிணக்கம்..!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள அன்னமங்கலம் மத நல்லிணக்கத்திற்கு வழிகாட்டும் கிராமமாக உள்ளது.
கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள இக்கிராமத்தில் இலுப்படியான் கருப்பண்ண சுவாமி என்கிற இந்து மதத்தை சார்ந்த கோயில் உள்ளது. இக்கோயிலில் நடைபெறும் திருவிழா சுமார் 100 ஆண்டுகள் பழமையானது.
இக்கோயில் தேர் திருவிழாவின் போது இசுலாமியர் ஒருவர் தேரை வடம் பிடித்து இழுத்து வருகிறார். இது மதநல்லிணகத்தை புலப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

மூன்றாம் தலைமுறையாக இத்தேரை வடம் பிடித்து இழுக்கும் அலியார் சுமார் 70 வயது நிரம்பியவர். இவர் அருகில் உள்ள விசுவக்குடி கிராமத்தில் வசித்து வருகிறார்.

இவருடைய செயல் மத நல்லிணக்கம் இன்னும் சாகவில்லை என்பதை நிரூபிப்பதாக உள்ளது.

இதே கிராமத்தில் இந்துமத ஆஞ்சநேயர் கோயில் ஒன்றும் உள்ளது. இந்த கோயிலில் ஜோசப் என்கிற கிறிஸ்தவர் பூசாரியாக செயல்படுவது தான் வியப்புக்குரியது. இது சமய நல்லிணகத்திற்கு எடுகாட்டாக திகழ்கிறது.
இங்கு எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் இசுலாமியர்களே அதிகமான முறை ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கபடுவர்.

இதுவும் மதநல்லிணக்கத்திற்கு உதாரணம் தான்.
தன் குடும்பத்தாரிடம் காட்டும் அன்பையும் தாண்டி சாதி, மத போதமின்றி அனைவரிடமும் அன்பு செலுத்துவதே உண்மையான மதநல்லிணக்கம்.

www.visvakudi.com

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-