அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஜித்தா(18 மே 2017): சவூதியில் பொது மன்னிப்பை பயன்படுத்தி நாட்டுக்கு செல்பவர்கள் மீண்டும் சவூதிக்கு வருகை புரிந்து பணிபுரிய வாய்ப்பு உள்ளதாக சவூதிக்கான இந்திய அம்பாஸிடர் அஹமது ஜாவித் தெரிவித்துள்ளார்.


சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் சவூதியை விட்டு வெளியேற சவூதி அரசு வழங்கியுள்ள மூன்று மாத பொதுமன்னிப்பு காலம் இன்னும் ஒரு மாதத்தில் முடிவடைகிறது. இந்நிலையில் இதுவரை இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்தியாவுக்கு செல்லாதவர்கள் உடன் நாட்டுக்கு செல்லுமாறு சவூதிக்கான இந்தியன் அம்பாசிடர் அஹமது ஜாவித் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "சவூதி தற்போது வழங்கியுள்ள பொது மன்னிப்பு முன்பு வழங்கிய பொது மன்னிப்பு போல் அல்ல, இந்த முறை சட்டவிரோதமாக தங்கியிருந்து நாட்டுக்கு சென்றாலும் மீண்டும் முறையான விசாவில் சவூதிக்கு வந்து பணிபுரிய வாய்ப்பு உள்ளது. எனவே இந்த வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் பொதுமன்னிப்பு கெடு காலம் முடிந்ததும் கடுமையான சட்ட நடவடிக்கைகளை சவூதி அரசு மேற்கொள்ளும் என்றும் தெரிகிறது. சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் 50 ஆயிரம் சவூதி ரியால் வரை சன்மானம் வழங்கப்படும் என்று சவுதி அரேபியாவின் பாதுகாப்புத் துறை அதிகாரி ஜமான் பின் அஹமது அல் காம்தி கூறியுள்ளது கவனிக்கத் தக்கது.

நன்றி: இந்நேரம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-