அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

: மே 24
புனிதமிகு ரமலான் மாதம் எதிர்வரும் மே 27 ஆம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அமீரக சிறைகளிலிருந்து 977 அமீரக சிறைவாசிகளை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார் அமீரக ஜனாதிபதி ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் அவர்கள்.

விடுதலையாகும் சிறைவாசிகளின் வாழ்வு கடினமற்றதாகவும், சிறப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் மீதுள்ள பொருளாதார பிரச்சனைகள், நஷ்டஈடுகள் அனைத்தையும் அரசே ஏற்கும் எனவும் அறிவித்துள்ளார்.

சம்பளத்தை முன்கூட்டி வழங்கும் எமிரேட்டுகள்:
புனித ரமலானை சிறப்புடன் அனுசரிக்கும் நோக்குடன் அஜ்மான், உம்மல் குவைன் மற்றும் ராஸ் கைமாவின் ஆட்சியாளர்கள் தங்கள் எமிரேட்டுகளை சார்ந்த அரசு ஊழியர்கள் அனைவருக்கும் மே 25 ஆம் தேதியே இம்மாத சம்பளத்தை வழங்க உத்தரவிட்டுள்ளனர்.

Source: Khaleej Times
தமிழில்: 
அதிரை நியூஸ் நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-