அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

மஸ்ஜித் ஹலீமா அமைந்துள்ள இடம்
: மே 15:
சவுதி, தாயிப் நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதியிலும் 8 மணிநேரம் தொடர்ந்து கொட்டித் தீர்த்த மழையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.

அல் துஆபா கிராமத்தில் 'பனி சஆது' பகுதியில் அமைந்திருந்த வரலாற்று சிறப்புமிக்கதும், முஹமது நபி (ஸல்) அவர்களுக்கு இளமையில் பாலுட்டி வளர்த்த செவிலித்தாய் ஹலீமா அல் சாதியாஹ் அவர்கள் பெயரில் அமைந்திருந்ததுமான பள்ளி மழை வெள்ளத்தால் முற்றிலும் சேதமடைந்தது.

மழை, வெள்ளத்தை தொடர்ந்து சுகாதாரத் துறை, போக்குவரத்து துறை போன்றவை தங்களின் பணிகளை முடுக்கிவிட்டனர். 20 மேற்பட்டோர் பல்வேறு சாலை விபத்துக்களில் காயமடைந்தனர்.

குடும்பத்தினர் சென்ற 2 வாகனங்கள் மோதிக் கொண்டதில் 3 பெண்கள், 2 ஆண்கள், 3 குழந்தைகள் காயமடைந்தனர் அவர்களில் 2 பெண்கள் மற்றும் 2 குழந்தைகளின் நிலைமை மோசமாகவுள்ளது. அவர்கள் அனைவரும் தாயிபில் உள்ள இளவரசர் சுல்தான் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 
அதிரை நியூஸ்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-